தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஐ.ஐ.டி.,களின் இலவச இணையவழி படிப்புகள்!

ஐ.ஐ.டி.,களின் இலவச இணையவழி படிப்புகள்!

ஐ.ஐ.டி.,களின் இலவச இணையவழி படிப்புகள்!


ஜன 06, 2016 12:00 AM

ஜன 06, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 06, 2016 12:00 AM ஜன 06, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய கல்வி நிறுவனங்களான, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்சி.,) ஆகியவை இணைந்து 45 இலவச ஆன்-லைன் வழி படிப்புகளை வழங்குகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனுபவம் மிக்க பேராசிரியர்களே, இந்த படிப்புகளுக்கான பாடங்களை நடத்துகின்றனர்!

யார் படிக்கலாம்?
இவற்றில் சேர எந்த குறைந்தபட்ச கல்வித்தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை. கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வேலை தேடுவோர், இல்லத்தரசிகள் என யார் வேண்டுமானாலும் இந்த படிப்புகளில் சேர்ந்து இலவசமாக கற்க முடியும்!

ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.எஸ்சி., கூட்டாக இணைந்து உருவாக்கிய, என்.பி.டி.இ.எல்., எனப்படும் ‘நேஷனல் புரோகிராம் ஆன் டெக்னலாஜி என்கேன்ஸ்ட் லேர்னிங்’ மூலமாக இந்த அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

என்ன படிக்கலாம்?
என்.பி.டி.எல்., இணையதளத்தில், எளிய நடைமுறையில் பதிவு செய்து, சிவில் மற்றும் ஏரோஸ்பேஷ் இன்ஜினியரிங், பயோலாஜிக்கல் சயின்சஸ் மற்றும் பயோ இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட், மெக்கானிக்கல், வேதியியல், மொழி, உளவியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில், பேராசிரியர்களின் விளக்க உரைகளை உலகின் எந்த மூலையிலுருந்தும் கேட்டும், பார்த்தும் பயன் பெறலாம். மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ற பாடங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், வகுப்புகள் நிறைவடைந்ததும் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று ஐ.ஐ.டி.,யின் சான்றிதழ் பெற கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். எனினும், ‘அது மிகக்குறைவானதாகவே இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்
10 மணி நேரம் (4 வாரங்கள்),  20 மணி நேரம் (8 வாரங்கள்) மற்றும் 40 மணி நேரம் (12 வாரங்கள்) என, மூன்று வகையான கால அளவில், இந்த ‘ஆன்-லைன் சர்டிபிக்கேட்’ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

10 மற்றும் 20 மணி நேரப் படிப்புகள்: ஆராய்ச்சி ஓர் அறிமுகம், இன்பர்மேஷன் செக்யூரிட்டி, டிசைன் அனலைசஸ் பார் அல்கோரிதம், மைக்ரோவேவ் இன்டர்கிரேட் சர்க்கியூட், எஸ்டிமேஷன் பார் வயர்லஸ் கம்யூனிகேசன், ஏர்பிளேன் பர்பாமன்ஸ், வேதியில், இன்ஜினியரிங் கிராபிக்ஸ், மார்க்கெட்டிங், டெக்னிக்கல் இங்கீலிஷ் பார் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்.

கால அளவு: ஜனவரி முதல் மார்ச் வரை

தேர்வு நாள்: மார்ச் 20 மற்றும் 27, 2016

40 மணி நேரப் படிப்புகள்: இன்டஸ்டிரியல் ஆட்டோமேஷன் அன்ட் கன்ட்ரோல், ஜியோலஜி அன்ட் சாயில் மெக்கானிக், டிஸ்கிரீட் மேதமடிக்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, எலக்ட்ரோ மேக்னடிக் தியரி, கேஸ் டயனமிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள்.

கால அளவு: ஜனவரி முதல் ஏப்ரல் வரை

தேர்வு நாள்: ஏப்ரல் 24 மற்றும் மே 1, 2016

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 25

மேலும் விவரங்களுக்கு: www.nptel.ac.in

குறிப்பு: ‘ஆன்லைன் சர்டிபிக்கேட்’ படிப்புகளில் பங்கேற்கும் அனைவரும் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் தேர்வு எழுதி சான்றிதழ்களை பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us