தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கு எம்.சி.ஏ.டி.,

வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கு எம்.சி.ஏ.டி.,

வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கு எம்.சி.ஏ.டி.,


ஜன 05, 2016 12:00 AM

ஜன 05, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 05, 2016 12:00 AM ஜன 05, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில், மருத்துவம் படிக்க ‘மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் டெஸ்ட்’ எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது!

மருத்துவத் துறை சார்ந்த படிப்புகளில், மாணவர்கள் தனி திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்களின் அறிவியல் நுண்ணறிவு திறன்களை ஆராய்வதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 85 ஆயிரம் மாணவர்கள் எம்.சி.ஏ.டி., தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பெரும்பாலும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன படிப்புகள்: அலோபதிக் மெடிசன்(எம்.டி.,), ஆஸ்டியோபேதிக் மெடிசன்(டி.ஒ.,), போடியட்ரிக் மெடிசன்(டி.பி.எம்.,) மற்றும் வெட்னரி மெடிசன்(டி.வி.எம்.,) உள்ளிட்ட மருத்துவத் துறை  சார்ந்த படிப்புகளுக்கு ‘மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் டெஸ்ட்’ தேர்வு முக்கியமானது.

தேர்வு முறை

குறைந்தது 7.30 மணி நேரம் நடைபெறும் எம்.சி.ஏ.டி., தேர்வானது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. அவை:

1. பயலாஜிகல் அன்ட் பயோகெமிக்கல் பவுண்டேஷன் ஆப் லிவ்விங் சிஸ்டம்

2. கெமிக்கல் அன்ட் பிசிகல் பவுன்டேஷன் ஆப் பயலாஜிகல் சிஸ்டம்

3. சைக்காலஜிகல், சோசியல் அன்ட் பயலாஜிகல் பவுன்டேஷன் ஆப் பிகேவியர்

4. கிரிட்டிகல் அனலைசஸ் அன்ட் ரீசனிங் ஸ்கில்

ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 118 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்: நாடுகளைப் பொறுத்து, தேர்வு தேதிகள் மாறுபடுகின்றன. விரிவான தேர்வு தேதி விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு: https://students-residents.aamc.org/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us