தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/2030க்குள் உலகின் மிகப்பெரிய டெவலப்பர்கள் மையமாக இந்தியா மாறும்: சத்யா நாதெல்லா

2030க்குள் உலகின் மிகப்பெரிய டெவலப்பர்கள் மையமாக இந்தியா மாறும்: சத்யா நாதெல்லா

2030க்குள் உலகின் மிகப்பெரிய டெவலப்பர்கள் மையமாக இந்தியா மாறும்: சத்யா நாதெல்லா


செப் 19, 2026 03:29 PM

செப் 19, 2026 03:29 PM

Follow on GoogleFavourite on Google

செப் 19, 2026 03:29 PM செப் 19, 2026 03:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சியாட்டில் நடைபெற்ற 'IDEAS4INDIA' என்ற தலைப்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா தொழில்நுட்ப சி.இ.ஓ.,க்களின் மாநாடு நடைபெற்றது.

அமேசான், ஓபன் ஏ.ஐ., அன்ட்ரோபிக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சி.இ.ஓ.,க்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கேற்றனர்.

இதில், மைக்ரோசாப்ட் தலைவரும், சி.இ.ஓ.,வுமான சத்யா நாதெல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

“சியாட்டில் தொழில்நுட்ப சமூகத்தின் சுமார் 35 ஆண்டு கால வளர்ச்சியைப் பார்ப்பதில் தான் பெருமை கொள்கிறேன். அது இந்தியாவுடன் தனது உறவை வலுப்படுத்தி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏ.ஐ., என்பது ஒரு பொதுவான தொழில்நுட்பம். இதன் நன்மைகள் சம்பந்தப்பட்ட நாடுகள், சமூகங்கள் மற்றும் துறைகள் முழுவதும், அது பரவலாகக் கொண்டு சேர்க்கப்படுவதைப் பொறுத்தது.

இந்தியாவின் மனிதவளத் திறன் பாராட்டும் வகையில் உள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய டெவலப்பர்களைக் கொண்ட சமூகமாக இந்தியா உருவெடுக்கும்,” என்று கூறியுள்ளார்.

கிளவுட் மற்றும் ஏ.ஐ., உள்கட்டமைப்பு, திறன் மேம்பாட்டுக்காக 2026 முதல் 2029 வரை ஆசியாவில் தனது மிகப்பெரிய முதலீடான 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதே போல, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் ஏ.டபுள்யூ.எஸ்., தரவு மைய விரிவாக்கம் உட்பட, 2026 முதல் 2030 வரை மொத்தம் 48 பில்லியன் டாலர்களை அமேசான் முதலீடு செய்யவுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us