sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்

/

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்


ஆக 27, 2015 12:00 AM

ஆக 27, 2015 12:00 AM

Google News

ஆக 27, 2015 12:00 AM ஆக 27, 2015 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவி கண்காணிப்பு மற்றும் புவியியல் தகவல் நுட்பங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங்’ நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ் இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங், 1996ம் ஆண்டில் டேராடூனில் துவங்கப்பட்டது. ரிமோட் சென்சிங், புவியியல் நுட்பம், இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் மற்றும் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் துறைகளில் ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தோடு பயிற்சி வழங்கப்படுகிறது.

கல்வி திட்டம்

முதுநிலை
இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் மற்றும் டுவண்டி பல்கலைக்கழகம், நெதர்லாந்து ஐ.டி.சி., இணைந்து எம்.எஸ்சி., மற்றும் முதுநிலை டிப்ளமோ பட்டப் படிப்பில் புவியியல் தகவல் நுட்பஅறிவியல் (Geo- information science) புவி கண்காணிப்பு மற்றும் சிறப்புகள் பாடப்பிரிவை வழங்குகிறது.

எம்.எஸ்சி., பட்டம் டுவண்டி பல்கலைக்கழகம் மூலமும், முதுநிலை டிப்ளமோ பட்டம் ஐ.ஐ.ஆர்.எஸ்., மற்றும் ஐ.டி.சி., கூட்டாக இணைந்தும் வழங்கப்படுகிறது. இதில் எம்.எஸ்சி., வகுப்பில் 13.5 மாதங்கள் ஐ.ஐ.ஆர்.எஸ்.,லிலும், 14.5 மாதங்கள் நெதர்லாந்து ஐ.டி.சி.,லும்  படிக்க வேண்டும்.

எம்.டெக்., படிப்பில் ரிமோட் சென்சிங், செயற்கைக்கோள் பகுப்பாய்வு, புவியியல்  தகவல் அமைப்பு, ஜி.பி.ஸ்., தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளில் விவசாயம், மண், காடுகள், ஜியோ அறிவியல், நீர் வளங்கள் , கடல் மற்றும் வளிமண்டல அறிவியல் போன்ற பாடப்பிரிவின் மூலம் மாணவர்களுக்கு ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது.

சேர்க்கை முறை

எம்.எஸ்சி.,: எழுத்து, நேர்முகத் தேர்வு மற்றும் கல்வி செயல்திறன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
முதுநிலை டிப்ளமோ: கல்வி செயல்திறன் மற்றும் தகுதி பட்டியல் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
எம்.டெக்.,:  எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுவின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். ‘கேட்’ மதிபெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்.

தகுதிகள்
எம்.எஸ்சி., / எம்.டெக்.,:  இயற்பியல், எலக்ட்ரான், கணிதம், புவியியல், ஐ.டி., கம்ப்யூட்டர் அறிவியல், புவியமைப்பியல், புவி இயற்பியல், ஜியோ- இன்ஜினியரிங், விவசாயம், நகர்ப்புற சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இளநிலை படிப்பு அல்லது புவியியல் பிரிவில் முதுநிலை படிப்பு (அல்லது) பி.இ., / பி.டெக்., படிப்பில் பல்வேறு பிரிவுகள்.

விரிவான தகவல்களுக்கு: www.iirs.gov.in






      Dinamalar
      Follow us