ஆக 15, 2024 12:00 AM
ஆக 15, 2024 12:00 AM

உலக அளவில் மாற்று மருத்துவத்திற்கான தேடல் அதிகரித்து வரும் சூழலில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவப் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இத்தகைய படிப்புகளை நிறைவு செய்பவர்களுக்கு சர்வதேச அளவில் வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
தற்போது, தமிழக கல்லூரிகளில் இத்தகைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்புகள்:
பி.ஏ.எம்.எஸ்., - இளநிலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
பி.எஸ்.எம்.எஸ்., - இளநிலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
பி.எச்.எம்.எஸ்., - ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
பி.யு.எம்.எஸ்., - இளநிலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
படிப்பு காலம்:
ஐந்தரை ஆண்டுகள்
தகுதிகள்:
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற வெளிமாநில மாணவ, மாணவிகள் பொதுப்பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.சி.ஏ., / எஸ்.டி., / எம்.பி.சி., / பி.சி., / பி.சி.எம்., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.
என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட இளநிலை நீட்-2024 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இத்தகைய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
நீட் தேர்வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஒதுக்கீட்டு பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக மட்டுமே நடத்தப்படுகிறது.
வயது வரம்பு:
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
சேர்க்கை இடங்கள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 27, 2024
விபரங்களுக்கு:
www.tnhealth.tn.gov.in