/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
மதிப்பீட்டு முறையில் மாற்றம் வேண்டும்!
/
மதிப்பீட்டு முறையில் மாற்றம் வேண்டும்!
ஆக 14, 2024 12:00 AM
ஆக 14, 2024 12:00 AM

மாறி வரும் கல்வி முறை, கற்றல் முறைகளுக்கு ஏற்ப, கற்பித்தல் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டியது இன்றியமையாதது. அவ்வாறான நவீன கற்றல் முறையை பின்பற்றி, இன்றைய சூழலுக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்துகிறோம். மாணவர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
கல்வித் தரம்
நவீன பாடத்திட்டங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்த வளர்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், ஆசிரியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், சர்வதேச் கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், தரக்கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், மாணவர்களுக்கான உதவி, மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித் தரத்தை உறுதி செய்கிறோம்.
விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன், கேட்டரிங், புட் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி போன்ற தனித்துவமிக்க படிப்புகளை வழங்குவதோடு, அனைத்து பாடப்பிரிவுகளிலும் ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் புதிய ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபட ஊக்கம் அளிக்கிறோம்.
மாணவர்கள் வளர்ச்சியில் கவனம்
மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன், சமூக வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளோம். தனிப்பட்ட திறன் வளர்ச்சி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள், திறன்மிகு செயல்பாடுகள், உடல் நலன் சார்ந்த பயிற்சிகள், சர்வதேச சமூகத் தொடர்பு, சிக்கலை தீர்க்கும் திறன், வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றில் மாணவர்கள் மேம்பட கவனம் செலுத்துகிறோம்.
மதிப்பீட்டு முறை
மாணவர்களின் திறன்கள் ஏட்டுக்கல்வியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் தற்போதை நிலை மாறி, திறன் அடிப்படையில் மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட வேண்டும். கற்றல் திறனுடன், வாழ்க்கைத் திறன், நுண்ணறிவு ஆகியவையும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். திறன் அடிப்படையிலான கற்றல் முறையை கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் சமூக சமநிலையை உருவாக்க வேண்டிய கொள்கைகளை கொள்கை வகுப்பாளர்கள் உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்க வேண்டும்.
-சரஸ்வதி கண்ணையன், செயலர், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், கோவை.info@hindusthan.net
9843133333