/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
சர்வதேச அங்கீகாரம் 'ஏ.சி.சி.ஏ.,'
/
சர்வதேச அங்கீகாரம் 'ஏ.சி.சி.ஏ.,'
ஜூலை 11, 2024 12:00 AM
ஜூலை 11, 2024 12:00 AM

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்புமிக்க ஏ.சி.சி.ஏ., தகுதியை வழங்கும் தொழில்முறை கணக்கியல் அமைப்பு, 'தி அசோசியேசன் ஆப் சார்ட்டர்டு சர்ட்டிபைடு அக்கவுண்டன்ட்ஸ்'.
முக்கியத்துவம்
கணக்கியல், நிதி மற்றும் வணிக ஆகியவற்றில் சர்வதேச அளவில் மதிப்பு வாய்ந்த தகுதியாக கருதப்படும் ஏ.சி.சி.ஏ., 180க்கும் அதிகமான நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 2 லட்சத்து 33 ஆயிரம் ஏ.சி.சி.ஏ., உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், 5 லட்சத்து 36 ஆயிரம் வரும்காலங்களில் உறுப்பினர்களாக சேர்க்கை பெற உள்ளனர். 7,610க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இத்தகுதி பெற்ற நிபுணர்களை அங்கீகரித்து, ஆதரவளித்து, ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆகவே, கணக்கியல், தணிக்கை, வரிவிதிப்பு, ஆலோசனை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் பிரகாசிக்க விரும்பும் மாணவர்கள் இத்தகுதியை பெற முயற்சிக்கலாம்.
ஏ.சி.சி.ஏ., தகுதியை பெறுவதற்கான வழிகள்:
* 11ம் அல்லது 12ம் வகுப்பு பயிலும் போதே ஏ.சி.சி.ஏ.,க்கான பயிற்சியை துவக்கலாம்.
* இளநிலைப் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், பட்டப்படிப்புடன் சேர்த்து ஏ.சி.சி.ஏ., தகுதிக்கான தேர்வுகளை எழுத தயாராகலாம்.
* பி.காம்., பட்டதாரிகள் மற்றும் சி.ஏ., இறுதி மாணவர்கள், ஏ.சி.சி.ஏ.,யை பெற தகுதியுடையவர்கள்.
* சி.ஏ., பட்டம் பெற்றவர்கள் ஏ.சி.சி.ஏ., தகுதிக்கான தேர்வுகளில் ஒன்பது தாள்களை எழுதுவதில் இருந்து விலக்கு பெறலாம்.
ஏ.சி.சி.ஏ., நிபுணத்துவத்திற்கான பிரிவுகள்:
தடயவியல் கணக்கியல்
நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் கணக்கியல்
சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் - ஐ.எப்.ஆர்.எஸ்.,
இடர் மேலாண்மை
தரவு பகுப்பாய்வு மற்றும் நிதி தொழில்நுட்பம் - பின்டெக்
ஸ்டாராடெஜிக் வணிக மேலாண்மை
பொதுத்துறை கணக்கியல்
உள்துறை தணிக்கை
கருவூல மேலாண்மை
கார்ப்பரேட் கவர்னன்ஸ்
வாய்ப்புகள்:
நிதி கணக்கியல், மேலாண்மை கணக்கியல், தணிக்கை, வரிவிதிப்பு, கார்ப்பரேட் பைனான்ஸ், நிதிச் சேவைகள், பொதுத்துறை, ஆலோசனை, கல்வி மற்றும் பயிற்சி, தொழில்முனைவு ஆகிய துறைகளில் ஏ.சி.சி.ஏ., வல்லுநர்கள் ஏராளமான வாய்ப்புகளை பெறலாம். ஏ.சி.சி.ஏ., தகுதி உலகெங்கிலும் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கான நுழைவாயிலாகவும் விளங்குகிறது.