தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொலைநோக்குப் பார்வையே அவசியம்

தொலைநோக்குப் பார்வையே அவசியம்

தொலைநோக்குப் பார்வையே அவசியம்


ஆக 13, 2011 12:00 AM

ஆக 13, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 13, 2011 12:00 AM ஆக 13, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய அல்லது பர்ஸ் நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல், பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும்.

இளைய சமுதாயமே கனவு காணுங்கள் என்று கூறுகிறார் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒவ்வொருவரும் காணும் கனவு நிச்சயம் நினைவாகும். ஆனால் அதற்கு நாம் தான் உழைக்க வேண்டும்.

பள்ளிப் படிப்பின் போதே ஒரு லட்சியத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். லட்சியப் பாதையில் எத்தனையோ சறுக்கல்களும், தோல்விகளும் நம் பயணத்தை தடை செய்யக் கூடும். ஆனால், தோல்வி நமது வாழ்க்கைக்கு வேண்டுமானால் பாதிப்பை ஏற்படுத்தலாம், வருமானத்தை பாதிக்கலாம், உறவைக் கூட பாதிக்கலாம். ஆனால் தோல்வி என்பது நம் தன்னம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

லட்சியப் பாதையை நோக்கி சீரான வேகத்தில் நாம் பயணிப்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரே வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், நாம் செல்லும் பாதையில் எல்லாம் பாதைகளை ஏற்படுத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

பெரும் தலைவர்கள் கூறியதை படித்தும் கேட்டும் அதன்படி செயல்படுவதில் தவறில்லை. ஆனால், ஒரு நாள் உனக்கான ஒரு தனிப்பாதையை வகுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உன் கருத்தை தெரிவித்தாக வேண்டும். மற்றவர்கள் உன்னை பின்பற்றும்படி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தைக் கொள்ள வேண்டும்.

வனத்தை அளப்போம், நிலவை தாண்டுவோம் என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் நம் இளைஞர்கள் கற்பனை செய்தனர். அந்த கற்பனைதான் இன்று நிஜங்களாகிக் கொண்டிருக்கிறது.

எனவே கனவு காண்பதாலோ, கற்பனைகளோ எதற்கும் பயன்படாது என நினைக்காமல், கனவுகளையும், கற்பனைகளையும் நிஜங்களாக்கும் வழி என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் போகும் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றால், தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

இளைஞர்களே வாழ்க்கை சுமூகமாக சென்றால் போதும் என்று எண்ணாமல், சாதனைகளாகச் செல்ல வேண்டும் என்று எண்ணுங்கள். சுதந்திர இந்தியாவின் தூண்களே இளைஞர்கள்தான் என்ற தலைவர்களின் கருத்தை நிஜமாக்குங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us