தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வளர்ந்து வரும் ரீடெயில் மேனேஜ்மென்ட்

வளர்ந்து வரும் ரீடெயில் மேனேஜ்மென்ட்

வளர்ந்து வரும் ரீடெயில் மேனேஜ்மென்ட்


ஆக 16, 2011 12:00 AM

ஆக 16, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 16, 2011 12:00 AM ஆக 16, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரீடெயில் துறை என்பது நமது அந்த கால பலசரக்குக் கடை போன்ற சமாச்சாரம் தான். இந்த காலத்துக்கேற்ப கடைகள் நவீனமாகவும் வசதியுடையதாகவும் இவை மாறியிருக்கின்றன. இதற்கான முதலீடு, முன்பு போல அல்லாமல் இப்போது பெரிய அளவில் தேவைப்படுகிறது. அதாவது சில ஆயிரங்கள் இருந்தால் போதும் என்பது மாறி பல லட்சங்களோ அல்லது கோடிகளோ தேவைப்படும் துறையாக மாறியிருக்கிறது.

இன்றைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய கலாச்சார மாறுதல்களுக்கேற்ப இன்று சமையல் எண்ணெய் வாங்கும் கடையிலேயே மொபைலுக்கு ரீசார்ஜ் போட முடிகிறது. காய் வாங்கும் கடையிலேயே கார் கூட வாங்க முடிகிறது. இதில் இந்திய அளவிலும் உலக அளவிலும் இயங்கும் பெரிய நிறுவனங்கள் கால் பதித்திருக்கின்றன.

ரீடெயில் துறையில் 2 முக்கிய பணிகள் நடக்கின்றன. ஒன்று, கொள்முதல் பணி. அதாவது பெரிய ரீடெயில் நிறுவனங்களின் விற்பனைக்கு தேவைப்படும் பொருட்களை மொத்தமாக வாங்குவது. இப்படி வாங்கப்படும் பொருட்களை விற்பனை செய்வது மற்றொரு பணி. இவ்விரண்டு பணிகளுக்குமே அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

இன்று ரீடெயில் துறையில் பணி புரிய விரும்புவோர் அதிகமாக இருக்கின்றனர். அடிமட்டத்தில் விற்பனையாளராக பணி புரிய சிறப்புத் தகுதி எதுவும் தேவையில்லை என்றாலும், அடுத்தடுத்த உயர்ந்த பணிகளைப் பெற ரீடெயில் சிறப்புப் படிப்புகளைப் படிப்பது அவசியம். இப்போது பல நிறுவனங்கள் இந்த படிப்புகளை தர தொடங்கியிருக்கின்றன.

சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாது, மதுரை போன்ற 2ம் நிலை நகரங்களில் கூட ரீடெயில் படிப்புகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. ஹைபர்மார்க் கெட், சூப்பர் மார்க்கெட், ஹோல்சேல் சூப்பர் பஜார் என ரீடெயிலின் பல நிலை விற்பனை மையங்களிலும் சிறப்பான பணி வாய்ப்புகள் இருப்பதால் இதில் பட்டப்படிப்போ டிப்ளமோவோ சான்றிதழோ எதைப் படித்தாலும் நல்ல எதிர்காலம் உண்டு.

பிக் பஜார், ஜே.சி. பென்னி, டெஸ்கோ, ஷாப்பர்ஸ் ஸ்டாப், ரிலையன்ஸ், சுபிக்ஷா, ஐ.டி.சி. என நம் ஊர்களிலேயே இப்போது ரீடெயில் கடைகளை பார்க்க முடிகிறது. எனவே ரீடெயில் துறை எதிர்காலத்துக்கான சிறப்புத் துறை என்பதில் சந்தேகமில்லை.

கல்வி நிறுவனங்கள்:
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், புதுடில்லி,
ஏசியா பசிபிக் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், புதுடில்லி
இந்தியன் ரீடெயில் ஸ்கூல் பேர்ல் அகாடமி, புதுடில்லி
சோமையா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், மும்பை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us