தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவ விடுதியில் பாதுகாப்பாக இருக்க..

மாணவ விடுதியில் பாதுகாப்பாக இருக்க..

மாணவ விடுதியில் பாதுகாப்பாக இருக்க..


அக் 31, 2011 12:00 AM

அக் 31, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 31, 2011 12:00 AM அக் 31, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல பள்ளி மாணவ, மணவியர் விடுதிகளில் தங்கி படிப்பவர்களாக இருப்பார்கள். பள்ளி மட்டுமல்லாது தொழிற்படிப்பு, கல்லூரியில் பயிலும் மாணவர்களும் விடுதிகளில் தங்கிப் படிப்பார்கள்.

தங்களது ஊரிலோ அல்லது அருகாமையிலோ எந்த கல்வி நிறுவனமும் இல்லாத பட்சத்திலும், நல்ல கல்வி நிறுவனத்தில் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்திலும் ஒரு மாணவர் வீட்டை விட்டு தொலைவில் உள்ள கல்வி நிறுவனத்தில் சேர்கிறார்.

வீட்டிற்குச் சென்று வர இயலாத சூழ்நிலையில் கல்வி நிறுவனத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களாக இருந்தாலும் சரி, மாணவிகளாக இருந்தாலும் சரி விடுதிகளில் தகுந்த பாதுகாப்போது இருக்க வேண்டும்.

நல்ல நண்பர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தன்னுடன் தங்கியிருப்பவர்களையே நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை விட, அவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டு பிறகு நட்பை தீர்மானிப்பது நல்லது.

அதிக நேரம் வெளியில் இருப்பதையோ, இரவில் வெகு நேரம் கழித்து விடுதிக்கு வருவதையோ மாணவ, மாணவியர் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

முதல் முறையாக விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு வீட்டில் இருந்து பிரிந்து வந்த கவலை வாட்டும். அதையே நினைத்து கவலை கொண்டிராமல் படிப்பில் கவனம் செலுத்தி முன்னிலை பெற முயல வேண்டும்.

வெளியில் அறிமுகமாகும் நண்பர்களுக்கோ, தூரத்து உறவினர்களுக்கோ விடுதி பற்றிய விவரங்களை அளிக்க வேண்டாம்.

விடுதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கல்வி நிறுவன முதல்வரிடமோ, விடுதி பாதுகாவலரிடமோ தெரியப்படுத்தலாம்.

வேறு ஏதேனும் பிரச்சினையாக இருப்பினும் பெற்றோருக்கு தெரியப்படுத்தவதோ அல்லது வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் கூறுவது நல்லது.

நீங்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் அருகில் உள்ள உங்களது உறவினர்களிடம் உங்களது விடுதி முகவரி, தொலைபேசி எண்ணை கொடுப்பதுடன், அவர்களது முகவரி, தொலைபேசி எண்ணை வைத்திருப்பது நல்லது.

உங்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் வைத்திருங்கள். தேவையற்ற ஆடம்பர பொருட்களை வைத்திருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.

விடுதிக்கு என்று இருக்கும் விதிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் நிச்சயமாக மதித்து அதன்படி செயல்படுங்கள். அது உங்களது பாதுகாப்பிற்கும் நல்லதே.

விடுதியில் உங்களுடன் தங்கியிருக்கும் ஒரு நண்பரது தொலைபேசி எண்ணை வீட்டிற்கும், வீட்டு தொலைபேசி எண்ணை உங்களது நம்பிக்கையான நண்பருக்குத் தெரிவியுங்கள்.

உங்களுக்கு அவசரத்திற்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை எப்போதும் உடன் வைத்திருங்கள். உலர்ந்த பழங்கள், தானியங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விடுதி உணவு நேரமானாலோ, உங்களுக்குப் பிடிக்காத உணவாக இருந்தாலோ இவற்றை சாப்பிடலாம்.

அதிக விலை உயர்ந்த நகைகளை அணியாதீர்கள். மிகச் சாதாரண ஆடைகளை பயன்படுத்துங்கள். உங்கள் பாதுகாப்பை முதலில் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பாதுகாப்பையும் மதியுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us