தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இன்டீரியர் டிசைனிங் படிக்க விருப்பமா?

இன்டீரியர் டிசைனிங் படிக்க விருப்பமா?

இன்டீரியர் டிசைனிங் படிக்க விருப்பமா?


நவ 04, 2011 12:00 AM

நவ 04, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 04, 2011 12:00 AM நவ 04, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்டீரியர் டிசைனிங் என்பது, வீட்டின் உட்புறத்தை சிறப்பாக வடிவமைத்தல் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை தகுந்த இடத்தில், சிறப்பான முறையில் அடுக்குதல் போன்றவை பற்றிய படிப்பு. இதற்கு புதுமையான முறையில் சிந்தித்தல், ஆர்வம் மற்றும் பொருட்களை சிறந்த முறையில் கையாளுதல் போன்றவை அவசியம். இப்படிப்பை சில கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன அவை:

1. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டிசைனிங்
ஒரிசாவில் உள்ள இக்கல்வி நிறுவனம், இன்டீரியர் டிசைனிங் துறையில் மூன்று வருட இளங்கலை படிப்பு மற்றும் ஒரு வருட தொழிற் படிப்புகளை வழங்குகிறது.

கல்வித் தகுதி: பிளஸ் 2வில், 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.nifdindia.org என்ற இணைய தளத்தை
பார்க்கலாம்.

2. ஆர்க் அகடமி ஆப் டிசைன்
ஜெய்ப்பூரில் உள்ள இக்கல்வி நிறுவனம் இன்டீரியர் டிசைனிங் துறையில் இரண்டு ஆண்டு முதுகலை படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.

கல்வித் தகுதி: டிப்ளமோ படிப்பிற்கு பிளஸ் 2வில் தேர்ச்சியும், முதுகலை படிப்பிற்கு டிப்ளமோவில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.archedu.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

3. வோக் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி
பெங்களூருவில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு பி.எஸ்சி., படிப்பு மற்றும் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.

கல்வித் தகுதி: இப்படிப்பிற்கு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.voguefashioninstitute.org என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

4. ஏபிஜே., இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனிங்
டில்லியில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு டிப்ளமோ மற்றும் முதுகலையில் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.

கல்வித்தகுதி: பிளஸ் 2 வில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.apeejay.edu/aid/home  என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

5. ராப்ளீஸ் மில்லினியம் இன்டர்நேஷனல்
சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள இக்கல்வி நிறுவனம் டிசைனிங் துறையில் மூன்று ஆண்டு பட்டப் படிப்பை வழங்குகிறது.

கல்வித் தகுதி: இப்படிப்பிற்கு பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.educompraffles.com என்ற இணைய தளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us