தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/செல்டா சான்றிதழ் பெற்றால் அயல்நாடுகளில் ஆங்கிலம் கற்பிக்கலாம்

செல்டா சான்றிதழ் பெற்றால் அயல்நாடுகளில் ஆங்கிலம் கற்பிக்கலாம்

செல்டா சான்றிதழ் பெற்றால் அயல்நாடுகளில் ஆங்கிலம் கற்பிக்கலாம்


நவ 05, 2011 12:00 AM

நவ 05, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 05, 2011 12:00 AM நவ 05, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கிலம் உலகின் பொதுமொழியாகி விட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆங்கிலம் கற்பிப்பவர்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்க உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. சரியான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தால், உங்களுக்கான விலை அதிகம்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இதுபோன்றவர்களுக்கு CELTA சான்றிதழ் வழங்கும் தேர்வை நடத்துகிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். CELTA சான்றிதழ் பெற நீங்கள் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் படிக்க, பேச, கேட்க, எழுதுவதில்  நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

இச்சான்றிதழ் பெற விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குத் தேர்வு பெற்ற அனைவருமே வெற்றி பெற்றதாகக் கருத முடியாது. ஏ, பி, தேர்ச்சி என, மூன்று தரப்படுத்துதல்கள் இருக்கின்றன. ‘ஏ’ தரம் பெறுவது மிகவும் அரிது. ‘பி’ சான்றிதழ் மிக நல்ல என்ற வகையில் தரம் பிரிக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களும் உண்டு.

பயிற்சிக்கட்டணம் 11,000 ஆயிரம் ரூபாய். 130 நாடுகளில் 2,700 மையங்களில் தேர்வு எழுத முடியும். CELTA  சான்றிதழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும் சான்றிதழாகும். நீங்கள் வெளிநாடுகளில் கூட ஆங்கிலப் பயிற்றுனராகப் பணிபுரிய முடியும். இப்பயிற்சியை இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெறலாம்.  பி.பி.ஓ., மையங்கள், கல்வி நிறுவனங்களில் நல்ல வாய்ப்பு உண்டு. மிகச்சிறந்த ஊதியத்தைப் பெறலாம்.

சொந்தமாக ஆங்கிலம் கற்பிக்கும் மையத்தையும் நடத்தலாம். சீனா, மஸ்கட், கொரியா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு, இந்தியாவில் பணிபுரிபவர்களும் உள்ளனர். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.britishcouncil.org/india-education-course-details-celta-link என்ற இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us