தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டயட்டீசியன் ஆகலாமே!

டயட்டீசியன் ஆகலாமே!

டயட்டீசியன் ஆகலாமே!


நவ 08, 2011 12:00 AM

நவ 08, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 08, 2011 12:00 AM நவ 08, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று மாறிவரும் உலகில், நோய்கள் வருவதிலிருந்து தற்காத்துக் கொள்ள விரும்புவோர், சரியான உணவுப்பழக்கத்துக்கு மாற வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். இதனால் முன்பு எப்போதையும் விட, தற்போது டயட்டீசியனின் தேவை அதிகரித்துள்ளது.

அன்றாட உடல் உழைப்புக்கு ஏற்ப தேவைப்படும் கலோரி அளவு. அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம். எது சாப்பிடக்கூடாது என்பதை அறிவுறுத்துவது  டயட்டீசியன் பணி. உடல் பருமனாக இருப்பவர்கள் சாதாரண உடல் எடைக்கு திரும்புவதற்கும், குறைவான உடல் எடை கொண்டவர்கள் சரியான உடல் எடையை அடைவதற்கும் இவர்களுடைய ஆலோசனை அவசியம். நோயற்ற வாழ்வுக்கும், நீண்ட கால ஆரோக்கியத்துக்கும் டயட்டீசியனைத் தேடி செல்லும் காலமாக உள்ளது.

இப்போது இளம் வயதினரிடையே தவறான உணவுப் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, நேரம் தவறி சாப்பிடுதல், அதிக கலோரி உள்ள பாஸ்ட் புட் அயிட்டங்கள், காலம் நேரமின்றி எந்நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருத்தல், வாகனங்களில் அதிக நேரப் பயணம் ஆகியன, உடல் நலப் பிரச்னைகளுக்கு காரணமாகியுள்ளன. இதனால், இளம் வயதிலேயே இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மருத்துவரை சந்திக்கும் போது, டயட்டீசியனை சந்திக்க அறிவுறுத்தப்படுகின்றார். குறிப்பிட்ட நபரின் உடல் நல பிரச்னையை டாக்டருடன் செய்து கொண்ட ஆலோசனைகளின் படி டயட்டீசியன், உணவுகளை பரிந்துரைக்கிறார். ஆகவே, முன்பு எப்போதும் இல்லாத அளவில் டயட்டீசியனின் தேவை இப்போது அதிகரித்துள்ளது.

ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு தன்மை கொண்டது. ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும், வசதி வாய்ப்புகளும் வேறு பட்டது. ஆகவே, ஒரு வருக்குப் பரிந்துரைக்கப்படும் உணவை இன்னொருவருக்குப் பரிந்துரைக்க முடியாது.

டயட்டீசியன் ஆக விரும்புவோர், உடலியல் மற்றும் உயிரியலில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். உணவு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவராக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் நல்ல ஆலோசகராகவும் இருக்க வேண்டும்.

ஹெல்த் பிட்னஸ் மையங்கள், அழகு நிலையங்கள், மருத்துவ மனைகள், சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற முடியும். விளையாட்டுக்குழு, தனி நபர்களுக்கும் ஆலோசகராகவும் செயல்பட முடியும். தனி கிளினிக் வைத்து நடத்தவும் முடியும். மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை டயட்டீசியன் பணியில் சம்பாதிக்க முடியும். தனிநபர் ஆலோசனைக்கு மாதம் ரூ.ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பெற முடியும்.

பிளஸ் 2 முடித்த பின் சேரக் கூடிய ஹோம் சயின்ஸ் படிப்புகளிலும் எம்.எஸ்சி., படிப்பிலும் உணவியல் மற்றும் உணவூட்டம் சிறப்புப் பாடமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன் நுண்ணூட்டவியலுக்கான தனிப் பட்டயப்படிப்புகளும் உள்ளன. படிக்கும் காலத்தில், மருத்துவ மனைகளில் டயட்டீசியனிடம் பயிற்சிக்காக மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது படித்து முடித்த பின், பணியாற்றுவதற்கு உதவியாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us