நவ 18, 2011 12:00 AM
நவ 18, 2011 12:00 AM
கடந்த 1914ம் ஆண்டு, மேக்ஸ் ப்ளெட்சர் என்பவர், "பாப்பி த செய்லர்(Popeye The Sailor)" என்ற அனிமேஷன் படத்தை திரையிட்டார்.
அப்போது அவர் நினைத்திருக்க மாட்டார், தான் வரலாற்றில் நீங்காத இடம்பெறுவோம் என்று. அவருடைய படத்தால் அவர் நீங்காத புகழ் பெறவில்லை. அவர் அதன்மூலம் அறிமுகப்படுத்திய ரோட்டோஸ்கோப்(ROTOSCOPE) என்ற தொழில்நுட்பம்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அனிமேஷன் பட உலகில் ஒரு புதிய புரட்சியை ரோட்டோஸ்கோப் தொழில்நுட்பம் ஏற்படுத்தியது.
ரோட்டோஸ்கோப் தொடர்பான வேலை வாய்ப்புகள்
ஒரு டிஜிட்டல் ரோட்டோஸ்கோப் வல்லுநர், 2D இமேஜ் செயல்பாட்டைக் கொண்டும், கருவிகள் வரைந்தும் அனிமேஷன் நுட்பத்தை மேற்கொள்கிறார். இத்துறையில் மேட்டீஸ்(Mattes) எனும் தொழில்நுட்பம் பலவிதங்களில் பயன்படுகிறது. கம்பியிழை அகற்றல், மோசடி தவிர்த்தல், பின்புலத்தை அமைத்தல், நீலத்திரை வெளிக்கொணர்வு(Blue screen extraction) போன்ற பலவிஷயங்களுக்கு இந்த மேட்டீஸ் பயன்படுத்தப்படுகிறது.
வருடம் முழுவதும் நல்ல சம்பளத்தில் இத்துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பல தயாரிப்பு அல்லது உற்பத்தி நிறுவனங்கள்(Production houses) மற்றும் படைப்பாக்க மற்றும் அலங்காரப் பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் ரோட்டோஸ்கோப் வல்லுநர்கள் பரவலான பணி வாய்ப்புகளை பெறுகிறார்கள்.
டைனமிக் கிராபிக்குகளை உருவாக்குவதில், மோஷன் கிராபிக்(Motion graphics) வல்லுநர்கள்கூட, குறிப்பிட்ட அளவிலான ரோட்டோஸ்கோபி(Rotoscopy) பணியை செய்ய வேண்டியுள்ளது. இவைதவிர, Prime Focus, Reliance Media works, Eyeqube, Prana Studios, Tata Elexsi Studios, EFS Prasad Labs, MPC, Technicolor Paprikas, Rhythm n Hues போன்ற பல நிறுவனங்கள் ரோட்டோஸ்கோப் வல்லுநர்களுக்கான பரவலான பணி வாய்ப்புகளை வைத்துள்ளன.
இதைத்தவிர, திறமையான வல்லுநர்களுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி வாய்ப்புகள் உள்ளன. வல்லுநர்கள் பணி வாய்ப்புகளைப் பெறுவதில், பயிற்சி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
சம்பளம்
உள்மைய பயிற்சியை முடித்தவுடன், ஒரு இளநிலை ரோட்டோஸ்கோப் வல்லுநருக்கு, சில முன்னணி அனிமேஷன் தயாரிப்பு நிறுவனங்கள், ஆரம்பத்தில் ரூ.7,500 முதல் 12,000 வரை மாத சம்பளமாக வழங்குகின்றன. அதேசமயம், 3 முதல் 5 வருட அனுபவமுள்ள ரோட்டோஸ்கோப் வல்லுநர், மாதம் ரூ.12,000 முதல் 20,000 வரை சம்பாதிக்கலாம்.
மேலும், ரோட்டோ மேற்பார்வையாளர்கள், மாதம் ரூ.20,000 முதல் 40,000 வரை சம்பாதிக்க முடியும் மற்றும் இதிலே சில வருடங்கள் அனுபவமுள்ளவர்கள், ரூ.45,000 முதல் 1,00,000 வரை சம்பாதிக்க முடியும். பொதுவில், பிறவகை அனிமேஷன் வல்லுநரைப் போலவே, ரோட்டோஸ்கோப் வல்லுநரும் தனது திறமை, உழைப்பு மற்றும் குணநலன் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுக்கு வருகிறார். மேலும், ஒரு ரோட்டோஸ்கோப் வல்லுநருக்கு Adobe Photoshop, Adobe After effects, Eyeon Rusion, Foundry Nuke, SILHOUETTE, Mocha 2.0/Mocha Pro. போன்றவை தெரிந்திருக்கவும் வேண்டும்.
ரோட்டோஸ்கோப் தொடர்பான படிப்பை மேற்கொள்ள, குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை முடித்திருக்க வேண்டும்.
