நவ 27, 2011 12:00 AM
நவ 27, 2011 12:00 AM
* சான்றளிக்கப்பட்ட நிதி திட்டமிடுநர்(CFP) படிப்பு சிறந்ததா? இதன் எதிர்கால நன்மைகள் மற்றும் குறைகள் என்ன? (கந்தப்பன், சென்னை)
இது ஒரு ஆர்வமிகுந்த படிப்பு. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இப்படிப்பின் வளர்ச்சி ஆரம்ப நிலையில் உள்ளது. பழைய முறையிலான பண சேமிப்பு மற்றும் முதலீட்டு முறைகள் அதன் முக்கியத்துவத்தை இழக்கும்போது, புதிய நிதி வாய்ப்புகள் உருவாகும். அந்த சமயத்தில், நிதி திட்டமிடுநரின் தேவை முக்கியமானது.
ஒரு மனிதன், நல்ல தைரியமுள்ளவனாகவும், கருத்து வேறுபாடுகளைக் களையும் ஆற்றல் உள்ளவனாகவும் இருந்தால் ஒழிய, இந்த CFP தொழிலை முழுநேர தொழிலாக ஒருவர் மேற்கொள்ளக் கூடாது. அதேசமயம், இதை பகுதிநேர தொழிலாகக் கொண்டால் நல்லது மற்றும் நல்ல வருமானமும் கிடைக்கும். மேலும், இப்படிப்பானது, இந்தியாவில் பல இடங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிதி ஆலோசனை சேவை மையங்களில் பணியைப் பெற உதவுகிறது. தற்போது, இந்த CFP படிப்பை, ஏற்கனவே MBA மற்றும் CA படிப்பை முடித்தவர்களே மேற்கொள்கின்றனர்.
* ஒருவர் மென்திறன்களை(Soft Skills) எவ்வாறு வளர்த்துக்கொள்வது? ஒருவர் வேலை பெறுவதில், மென்திறன்கள் முக்கியப் பங்காற்றுகின்றனவா?(மான்சிங், சாயல்குடி)
ஆம். தகவல்தொடர்பு, குழு செயல்பாடு, பேச்சுவார்த்தை மற்றும் தலைமைத்துவம் போன்றவை, வேலைப் பெறுவதற்கான முக்கியத் திறன்கள். தகவல்தொடர்பு, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் வியாபார பண்பு போன்றவைகளை ஒருவர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். அதேசமயம், குழுப் பணி போன்ற வைகளை, ஒருவர் தனது அனுபவங்களின் மூலமே வளர்த்துக்கொள்ள முடியும்.
உங்களுக்கு எத்தகைய திறன்கள் மேம்பட வேண்டும் என்பதை வகுத்துக்கொண்டு, அதற்கேற்ப முயற்சி செய்ய வேண்டும். மென்திறன்களை வளர்த்துக் கொள்வதில் விழிப்புணர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிகமாக கலந்துரையாடுதல், ப்ராஜெக்ட்டுகளை பொறுப்பேற்றல் மற்றும் சிலவகைப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபடுவது போன்றவை முக்கியமானவை. அதேசமயம், பிறருடன் நல்ல முறையில் பழகி, அவர்களுடன் அனுசரணையுடன், நல்ல முறையில் நடந்துகொள்வது, உங்களுக்கு வழங்கப்பட்ட பணியை விருப்பத்துடன் மேற்கொள்வது போன்ற பண்புகள் இருந்தாலே போதும், உங்களுக்கான மென்திறன் மேம்பாட்டைப் பற்றி அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை.
* எனது சகோதரி, ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பி.ஏ. படிக்கிறார். ஆனால், அவர் தனது துறையை மாற்றிக்கொள்ள விரும்புகிறார். நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம். அவருக்கான வாய்ப்புகள் என்னென்ன?(கணபதி, தூத்துக்குடி)
உங்களின் சகோதரி, மொழிபெயர்ப்பு துறையில் எம்.ஏ படித்தால், அவருக்கான தொழில் வாய்ப்புகள் அதிகம். பல அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைவு. இதைத்தவிர, அவர் Journalism and Mass Communication படிப்பை ஹிந்தி மொழி மீடியாவிற்காக படிக்கலாம். இத்துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் மற்றும் நல்ல சம்பளமும் உண்டு.
மேலும், அரசுப் பணிகளுக்கான பல போட்டித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், உங்களது சகோதரியின் திறமை என்ன? மற்றும் அவரது உள்ளார்ந்த விருப்பம் என்ன? என்பதை தெளிவாக அறிந்தே, இறுதி முடிவை மேற்கொள்ளவும்.
* நான் தொலைநிலைக் கல்வி முறையில் MBA முடித்துள்ளேன். ஒரு சிறிய நிதி நிறுவனத்தில் தற்போது பணிபுரிகிறேன். நான் பணியை மாற்றும்போது எனது MBA துணைபுரியுமா? நான் ஒரு நிதி திட்டமிடுநராக பணிபுரிய வேண்டுமெனில் என்ன படிக்க வேண்டும், CFP, CPA அல்லது CFA ?(வின்சென்ட், கோவில்பட்டி)
தொலைநிலை () என்பது ஒரு கூடுதல் தகுதி மட்டுமே. அதேசமயம், உங்களின் பணி அனுபவம் மற்றும் நடைமுறைத் திறன் போன்றவையே உங்களது அடுத்தடுத்த பணி நிலைகளைத் தீர்மானிக்கும். ஒரு நிதி திட்டமிடுநர் என்ற நிலைக்கு செல்ல வேண்டுமெனில், CPA அல்லது CFA போன்ற படிப்புகளைவிட, CFP படிப்பே சிறப்பானது.
* நான் MSW முடித்து, ஒரு சிறிய NGO-வில் பணிபுரிகிறேன். இணையத்தின் மூலம் பல பணி வாய்ப்புகளைத் தேடி, எனது தகுதிக்கு ஒத்துவரக்கூடிய எல்லாப் பணிகளுக்கும் விண்ணப்பித்து விட்டேன். ஆனால், ஒரு இடத்திலிருந்துகூட எனக்கு அழைப்பு வரவில்லை. எனவே, இதுதொடர்பாக உங்களின் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.(அனந்தப்பசாமி, திருநெல்வேலி)
NGO -க்களில் பணிவாய்ப்புகளைப் பொறுத்தவரை, இணையதளத்தில் விண்ணப்பிப்பதை விட, நேரடியாகவே விண்ணப்பம் செய்தலே நன்று. அதேசமயம், www.indianngos.com, www.gdrc.org/ngo/ மற்றும் www.devnetjobs.org. போன்ற இணையதளங்களில், NGO தொடர்பாக ஏராளமான தகவல்களைப் பெறலாம்.
மேலும், பல கார்பரேட் நிறுவனங்கள், தங்களின் சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு MSW பட்டதாரிகளை பணியமர்த்துகின்றன. மேலும், Microfinance நிறுவனங்களிலும் முயற்சி செய்யவும்.
* நான் B.com முடித்துள்ளேன். நான் முதுநிலை படிப்பை மேற்கொள்ள நினைக்கும் கல்லூரியானது, MBA மற்றும் PGDM ஆகிய படிப்புகளை வழங்குகிறது. இந்த இரண்டில் எந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்?(சுரேஷ், திருப்பூர்)
AICTE விதிகளின்படி, எந்த பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்படாத, 2 வருட முழுநேர பொது மேலாண்மை மேலாண்மை படிப்பானது, PGDM என்ற வரையறைக்குள் வரும். அதேசமயம், பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 2 வருட முழுநேர மேலாண்மை படிப்புகள் MBA எனப்படும். இந்த வித்தியாசங்கள் பட்டங்களின் பெயருக்கானது மட்டுமே, மற்றபடி படிப்பின் தரத்தைக் குறிப்பதல்ல. நீங்கள் மேலாண்மை படிப்பில் எதிர்காலத்தில் Ph.D மேற்கொள்ள விரும்பினால், MBA படிக்கவும்.
* நான் BCA இறுதியாண்டு படிக்கிறேன். எனக்கு Networking மற்றும் Troubleshooting துறைகளில் ஆர்வம் அதிகம். இந்த இரண்டில் நான் எதை மேற்கொள்ளலாம்?(பாபு, இளையாங்குடி)
ஒரு பெயர்பெற்ற கல்வி நிறுவனத்தில் MCA படித்திருந்தால், உங்களுக்கு Application programmer, Computer consultant, Computer security analyst, Data communications specialist, Management information system analyst, System analyst, System design specialist அல்லது System development Manager போன்ற நிலைகளிலான பணிகள் கிடைக்கும். அதேசமயம், நெட்வொர்க்கிங் துறையில் செல்ல Hardware அறிவு அடிப்படை தேவையாகும். இத்துறையில் உங்களுக்கு, analysing, installing and configuring an organisation's network போன்ற பொறுப்புகளை மேற்கொள்ளும் நெட்வொர்க் நிர்வாகி பணி கிடைக்கிறது.
மேலும், கூடுதல் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் அனுபவம் ஆகியவை கிடைத்தப் பிறகு ஒருவர், Network programmer அல்லது Network or Information System Manager போன்ற பணி நிலைகளுக்கு உயரலாம்.
