தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விசால வாய்ப்புகளை வழங்கும் வெளிநாடுகள்

விசால வாய்ப்புகளை வழங்கும் வெளிநாடுகள்

விசால வாய்ப்புகளை வழங்கும் வெளிநாடுகள்


நவ 27, 2011 12:00 AM

நவ 27, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

நவ 27, 2011 12:00 AM நவ 27, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டிற்கு சென்று வித்தியாசமாக படிக்க வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு உள்ளது. பொதுவாக, இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்றாலே, பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகள்தான் என்ற நிலை உள்ளது. ஆனால், அவற்றைத் தாண்டி, சாகசம், அழகியல், சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான படிப்புகளும் உண்டு மற்றும் அவைகளுக்கு உள்நாட்டில் மவுசும் உண்டு மற்றும் அவற்றைப் படிக்க கணிசமான அளவில் மாணவர் சமூகத்தினர் ஆர்வமாக உள்ளனர்.

வெளிநாடு செல்லுதல்

மேற்கூறிய வித்தியாசமான படிப்புகளை மேற்கொள்ள, ஒருவர் இந்தியாவை விட, ஏன் வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறார் என்ற கேள்வி எழலாம். அதற்கு காரணமும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, மேற்படிப்பு என்றாலே, பொறியியல், மருத்துவம், வணிகம், சட்டம் மற்றும் மேலாண்மை என்ற சில நிலைகளுக்குள்தான் ஊக்கம் அளிக்கப்படுகிறது.

பள்ளி படிப்பின்போதே இந்த அறிவுரைகள் தொடங்கிவிடுகின்றன. வழக்கமான துறை மற்றும் படிப்புகளைத் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை இந்திய சமூகம் இன்னும் உணரவில்லை. இந்த நிலையில்தான் வெளிநாட்டு கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. முன்னேறிய நாடுகளில் நிலைமையே வேறு. அவர்களுக்கு உலகம் பெரிது.

விளையாட்டு மற்றும் சாகச படிப்புகள்

சாகசம், விளையாட்டு, திறன் வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கு என்ற அளவில் அங்கு பல வித்தியாசமான படிப்புகளை மேற்கொள்வதற்கான களம் பெரிது.

எனவேதான், வாய்ப்புள்ள மாணவர்கள் வெளிநாடு சென்று நடனம், மலையேறுதல், படகோட்டுதல், சாகச சுற்றுலா உள்ளிட்ட பலவித படிப்புகளை மேற்கொள்கின்றனர். மேலும், இந்தியா திரும்பி, இதுதொடர்பான பள்ளிகளை தொடங்கும் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் பெறுகின்றனர். வெளிநாட்டில் அவர்கள் பெறும் வித்தியாசமான அனுபவங்கள் அவர்களின் உலகை விரியச் செய்கிறது.

வெளிநாட்டினர், தங்களின் பொழுதுபோக்காக மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளை இணையம் மூலமாக அறியும் இந்திய இளம் தலைமுறையினர், அவைகளின் மீது ஆர்வம் கொள்கின்றனர். மேலே குறிப்பிட்டது போன்ற சாகசம் மற்றும் பொழுதுபோக்கு துறைகளை பல முன்னேறிய நாட்டு கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன.

கனடாவின் ப்ரேசர் வேலி பல்கலைக்கழகம் சாகச சுற்றுலா படிப்புகளை வைத்துள்ள கல்வி நிறுவனங்களில் முக்கியமானது. மேலும், ஆஸ்திரேலியாவிலும், விளையாட்டு தொடர்பான பல இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. Exercise Rehabilitation science, Exercise physiology, Sports psychology அல்லது Biomechanics போன்ற பல படிப்புகள் ஆஸ்திரேலிய பல்கலைகளில் வழங்கப்படுகின்றன. இத்தகைய படிப்புகளை வழங்குவதில், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைப் போல், நியூசிலாந்தும் புகழ்பெற்று விளங்குகிறது.

வெளிநாட்டிற்கு பறக்கும் இந்திய மாணவர்கள், வாழ்வின் பல புதிய அனுபவங்களை அங்கே உணர்கின்றனர். அந்த அனுபவங்களை இந்தியாவிற்கு அவர்கள் கொண்டு வருகின்றனர். இதன்மூலம் ஒரு புதிய கலாச்சார இணைவு ஏற்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், ஒயின் தயாரித்தல் போன்ற படிப்பையும் மேற்கொள்ளலாம். இப்படிப்பில், பட்டங்கள் மற்றும் டிப்ளமோக்களும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, Gaming management எனப்படும் சூதாட்ட அரங்க மேலாண்மை படிப்பும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில், வெறுமனே ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெறுவதை பல மாணவர்கள் விரும்பவில்லை. வெறும் ஹாஸ்பிடாலிடி(விருந்தோம்பல்) மேலாண்மை என்றளவில் உள்நாட்டில் ஒரு பட்டத்தைப் பெறுவதைவிட, உள்அரங்க விளையாட்டு மேலாண்மையுடன் சேர்த்து, அந்தப் பட்டத்தை வெளிநாட்டில் பெறும்போது, அதன் மவுசு மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பல மாணவர்கள் அதைத்தான் விரும்புகின்றனர்.

படைப்பாக்க மீடியா

படைப்பாக்க மீடியா, கலை மற்றும் கலாச்சார துறையில், உலகெங்கிலுமுள்ள பல முக்கியப் பல்கலைக்கழகங்கள், எப்போதுமே அதிகளவிலான படிப்புகளை வழங்குகின்றன. ஏனெனில், டிஜிட்டல் மீடியா, அனிமேஷன் மற்றும் விளம்பரம் போன்ற துறைகளில், இன்றைய போட்டிகள் மிகுந்த சூழலில் திறன்வாய்ந்த நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

எனவே, மேற்கண்ட துறைகளுக்கும், Creative writing, Drama and Theatre studies, Film making, Screen - writing மற்றும் Shooting documentaries போன்ற படிப்புகளை மேற்கொள்ள பல மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். இவை தொடர்பான பல படிப்புகள் அமெரிக்காவில் வழங்கப்படுகின்றன. மேலும், Fashion மற்றும் Life style துறைகளில் பல சிறந்த படிப்புகள் பிரான்ஸ் நாட்டில் வழங்கப்படுகின்றன. பராமரிப்பு தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள ஹாலந்து நாட்டிற்கும், தோல் மற்றும் காலணி தயாரித்தல் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள இத்தாலி நாட்டிற்கும் மாணவர்கள் செல்கின்றனர்.

மேலும், இந்தியாவில் இன்று மாறிவரும் பொருளாதார சூழல், பலவித புதுமையான தொழில்களைத் தொடங்க இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பை வழங்குகிறது. உதாரணமாக, செல்லப் பிராணிகள் வளர்ப்பது தொடர்பாக ஒரு படிப்பை வெளிநாட்டில் முடித்தால், அதுதொடர்பாக தொழில்தொடங்க, இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது.

சுற்றுச்சூழல் காரணிகள்

இன்றைய நிலையில், ஓரளவு படித்த பல இந்திய இளைஞர்கள், எங்கேனும் கூடினால், சுற்றுச்சூழல் மற்றும் அதன் மாசுபாடு பற்றி பேச ஆரம்பித்து விடுகின்றனர். அந்தளவிற்கு அவர்களில் பலருக்கும் இத்துறையில் மிதமான மற்றும் மிகையான ஆர்வம் இருக்கிறது.

வெளிநாடுகளில், சுற்றுசூழல் தொடர்பான, சுற்றுச்சூழல் தாக்க அளவீடு, கார்பன் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் உள்ளிட்ட பலவிதமான சுற்றுச்சூழல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தியாவில், இதுதொடர்பான விரிவான படிப்பு வாய்ப்புகள் இல்லை. எனவே, பல மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று இதுதொடர்பான படிப்புகளை மேற்கொள்கிறார்கள்.

குறிப்பு

Adventure Tourism, Exercise Rehabilitation Science, Gaming and Hospitality Management, Wine Making, Casino management, Screen writing, Curatorial science and Carbon management போன்ற படிப்புகளை, வெளிநாட்டில் மேற்கொள்வதில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பரந்த விசாலமான வாய்ப்புகள் மற்றும் வித்தியாசமான அனுபவங்கள் போன்றவையே பல இந்திய மாணவர்களை வெளிநாட்டை நோக்கி தள்ளும் காரணிகளாக உள்ளன. ஒருவேளை, நாளை இந்தியாவிலும் சூழல் மாறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us