தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/டெலிபோன் மற்றும் வீடியோகான்பரன்சிங் இன்டர்வியூ பற்றி அறியுங்கள்!

டெலிபோன் மற்றும் வீடியோகான்பரன்சிங் இன்டர்வியூ பற்றி அறியுங்கள்!

டெலிபோன் மற்றும் வீடியோகான்பரன்சிங் இன்டர்வியூ பற்றி அறியுங்கள்!


டிச 06, 2011 12:00 AM

டிச 06, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 06, 2011 12:00 AM டிச 06, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்டர்வியூ என்றாலே, நேருக்கு நேர் அமர்ந்து சம்பிரதாயத்திற்காக ஒருசில கேள்விகளை கேட்டுவிட்டு முடித்துவிடுவது அந்த காலம். இன்று இன்டர்வியூ செயல்பாடானது அதிக நுட்பம் வாய்ந்ததாக மாறிவிட்டது. அதேசமயம், நேருக்கு நேர் அமர்ந்து நடத்தப்படும் இன்டர்வியூ செயல்பாடு அதிகளவில் நடைமுறையில் இருந்தாலும், டெலிபோன் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக இன்டவியூ நடத்தப்படுவதும் இன்றைய நிலையில் மிகவும் முக்கிய அம்சமாக உள்ளது. அவற்றைப் பற்றி சற்று விரிவாக காணலாம்.

டெலிபோன் இன்டர்வியூ

காலத்தை சேமிக்கும் வகையிலும், அவசர உலகிற்கு ஏற்ற வகையிலும் டெலிபோன் இன்டர்வியூ எடுக்கப்படுகிறது. இந்தவகை இன்டர்வியூவில், மரபு ரீதியான, வழக்கமான வழிமுறைகளில் தொகுக்கப்பட்டுள்ள கேள்விகள் கேட்கப்படும். டெலிபோன் மூலமாக கூறப்படும் பதில்களை வைத்து, பணிக்கு பொருத்தமான நபர் தேர்வுசெய்யப்படுவார். பொதுவாக டெலிபோன் இன்டர்வியூ என்பது இன்டர்வியூ எடுப்பவருக்கும், அதில் கலந்து கொள்பவருக்கும் சிரமமான விஷயமாக இருந்தாலும், இதில் சில-பல குறைபாடுகள் இருந்தாலும், மேல்நிலை பதவிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய, இந்தவகை இன்டர்வியூ உதவுகிறது.

இந்தவகை இன்டர்வியூவானது, ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறையிலேயே இருக்கும். இன்டர்வியூ எடுக்கும் குழுவிலுள்ள மொத்த உறுப்பினர்களை, அந்த குழுவின் தலைவர், தொலைபேசி மூலமாக எதிர்முனையில் இருக்கும் வேலைதேடுனருக்கு அறிமுகம் செய்கிறார். இதனடிப்படையில், ஒவ்வொருவரும் தங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டு கேள்விகளை கேட்கிறார்கள். அனைவரும் கேள்வி கேட்டு முடித்த பிறகு, இந்த இன்டர்வியூ செயல்திட்டம் நிறைவுபெறும். முடிவில், அளிக்கப்பட்ட பதில்களை வைத்து, முடிவெடுக்கப்பட்டு சேர்க்கை நடைபெறும்.

டெலிபோன் இண்டர்வியூவில் சிறப்பாக சாதிப்பதற்கான சில ஆலோசனைகள்

* நேருக்கு நேரான இன்டர்வியூவிற்கு தயாராவது போலவே, இந்த இன்டர்வியூவிற்கும் தயாராக வேண்டும். மேற்கூறிய அனைத்து வெற்றி நுணுக்கங்களை இந்தவகை இன்டர்வியூவிற்கும் பயன்படுத்த வேண்டும்.

* டெலிபோன் இன்டர்வியூ நடத்துவதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவைப் பற்றி முடிவுசெய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும் அல்லது நிறுவனமே அதை முடிவு செய்யும். அதேசமயம், தேதி மற்றும் நேரம் வழங்குவதில் நீங்கள நெகிழ்வுத் தன்மையுடன் நடந்துகொள்வது முக்கியம். நீங்கள் தயாராக இல்லாத நிலையில், அவசரப்பட்டு, டெலிபோன் இண்டர்வியூவிற்கான நேரம் மற்றும் தேதியை ஒப்புக்கொள்ள வேண்டாம்.

* டெலிபோன் இன்டர்வியூவின்போது கவனச் சிதறல் மட்டும் இருந்துவிடக் கூடாது. இன்டர்வியூ தொடங்கும்போதே, இன்டர்வியூ குழுவில் இருக்கும் நபர்களின் பெயரை கேட்டு குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர், அந்த செயல்பாடு முழுவதற்கும், அந்த குறிப்பிட்ட பெயர்களை அழைத்து பயன்படுத்தலாம்.

* ஆள் மாற்றி ஆள் பேசும்போது, சம்பந்தப்பட்டவரின் பெயரையும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், சுலபமான தகவல் தொடர்பை மேற்கொள்ள் முடியும்.

* ஒவ்வொரு நபரும் உங்களிடம் பேச ஆரம்பிக்கும்போதும், வணக்கம் போன்ற வாழ்த்து மொழிகளை பயன்படுத்தவும். இன்டர்வியூவின்போது, உங்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் அருகிலேயே வைத்துக்கொள்ளவும். குறிப்பு எடுக்க பேப்பர்-பேனா வைத்துக் கொள்ளவும்.

* குழுவின் நபர்கள் ஒவ்வொருவரும், உங்களிடம் பேசி முடித்து, அடுத்த நபருக்கு மாறும்போது, அவருக்கு நன்றி தெரிவிக்க மறக்கக்கூடாது.

* கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில்சொல்லப் பழக வேண்டும். அதேபோன்று பதில் சொல்லும் உங்களின் குரல் சத்தம் மற்றும் தொணியையும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வீடியோகான்பரன்சிங் இன்டர்வியூ

இந்தவகை இன்டர்வியூ ஏறக்குறைய நேரடி இன்டர்வியூ போலத்தான். ஏனெனில், உங்களையும், உங்களின் அங்க அசைவுகளையும், உங்களின் பாவனையையும் சம்பந்தப்பட்டவர்கள் இதன்மூலம் நேரடியாக பார்க்க முடியும். சில நிறுவனங்கள் இந்தவகை இன்டர்வியூக்களையே விரும்புகின்றன.

இந்த வகை இன்டர்வியூ அமைப்பு ரீதியிலானது. இதிலும் இன்டர்வியூ எடுப்பவர்கள், எண்ணிக்கை அளவில் மாறுபடுவார்கள். குழுவின் தலைவர் இதர உறுப்பினர்களை, வேலை தேடுநரிடம் அறிமுகப்படுத்துவார். இந்தவகை இண்டர்வியூ குழுவில் இருக்கும் ஆட்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒவ்வொரு உறுப்பினரும், வேலை தேடுநரிடம் சில கேள்விகளைக் கேட்பார்.

அனைவரும் கேள்விகேட்டு முடித்ததும் இண்டர்வியூ நிறைவுபெறும். இந்த இண்டர்வியூ என்பது ஏறக்குறைய நேரடி இண்டர்வியூ போலத்தான் என்பதால், அதில் பயன்படுத்தும் நுட்பங்கள் அனைத்தையும், ஒரு வேலை தேடுநர், இதிலும் பயன்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us