தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பணியிட விதிமீறல்கள்: இந்தியாவிற்கு முதலிடம்

பணியிட விதிமீறல்கள்: இந்தியாவிற்கு முதலிடம்

பணியிட விதிமீறல்கள்: இந்தியாவிற்கு முதலிடம்


டிச 23, 2011 12:00 AM

டிச 23, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 23, 2011 12:00 AM டிச 23, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாடுகளில் இயங்கும் வங்கிகளும், மருத்துவமனைகளும் தங்களது பணிகளை இந்தியாவில் கொடுத்து செய்து கொண்டிருக்கும் நிலையில், பணியிட விதிமீறல்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஐடி முதற்கொண்டு கணினியில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்களது அலுவலக கணினியில் வீடியோ கேம்களையும், சினிமா பாடல்களையும் பதிவிறக்கம் செய்வது மிகவும் சாதாரணமான விஷயமாக கருதலாம். ஆனால், அது ஐடி விதியை மீறுவதாக ஆகிறது என்கிறது ஒரு ஆய்வு

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தகவல் தொழில்நுட்ப விதிமுறையை மீறுவதில் இந்தியா முதல் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவும், வியட்னாமும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

5ல் நான்கு இந்தியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், இதில் மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இது தவறான செயல் என்று அவர்களுக்குத் தெரிவதேயில்லை என்பதும்தான் என ஆய்வு கூறுகிறது.

சிஸ்கோ கனக்டெட் வோல்ட் டெக்னாலஜி ரிபோர்ட் நடத்திய ஆய்வில் சுமார் 2,800 கல்லூரி மாணவர்களும், ஊழியர்களும் இடம்பெற்றனர். அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பிரேசில், யு.கே., பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்ட்ரேலியா நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், இளைஞர்கள் பலரும், வேலை நேரத்தில் தங்களது சொந்த பதிவிறக்கங்களை செய்வதை நிறுத்த தயாராக இல்லை. மேலும், தடையற்ற இணையதள சேவையும், தங்களது சொந்த தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கும் நிறுவனங்களையே வரவேற்கின்றனர்.

ஒவ்வொரு ஊழியரும், அலுவலகத்தில் தனது தொழிலுக்காக இணையத்தை பயன்படுத்துவதற்கு சரிசமமாக தனது சொந்த வேலைக்காகவும் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us