தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மாணவ, மாணவியர் எழுத வேண்டிய தேர்வுகள்

மாணவ, மாணவியர் எழுத வேண்டிய தேர்வுகள்

மாணவ, மாணவியர் எழுத வேண்டிய தேர்வுகள்


டிச 31, 2011 12:00 AM

டிச 31, 2011 12:00 AM

Follow on GoogleFavourite on Google

டிச 31, 2011 12:00 AM டிச 31, 2011 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவ, மாணவியர் ஒவ்வொரு படிப்புகளைப் படிக்கவும், பணிக்காகவும் பல்வேறு தேர்வுகளை எழுத வேண்டி உள்ளது.

தற்போது ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுக்கென தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்தி மாணவ சேர்க்கையை மேற்கொள்கின்றன. ஏராளமான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுவதால், நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்களும் அதிகரித்துவிட்டன.

ஒவ்வொரு நிலையிலும் ஒரு மாணவர் எழுதத் தகுதி வாய்ந்த நுழைவுத் தேர்வுகளின் விவரங்களைக் கீழே காணலாம்.

பத்தாம் வகுப்பு முடித்த ஒரு மாணவர் எழுதக் கூடிய தேர்வுகள்
இந்திய கப்பற் படை வீரராக சேர நடத்தப்படும் தேர்வு.
இந்திய கடற் பாதுகாப்புத் துறைத் தேர்வு.
ஏர்மேன் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கான தேர்வு
ரயில்வேத் துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவுத் தேர்வு
தொழிற்பிரிவு மாணவர்கள், ஐடிஐ அல்லது பாலிடெக்னிக்குகளில் சேர நடத்தப்படும் தேர்வு
ரயில்வே டிக்கெட் பரிசோதகர் பணியிடத் தேர்வுகளை எழுதலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர் எழுதக் கூடிய தேர்வுகள்
ஐஐடிக்களில் சேர விரும்பும் மாணவர் ஐஐடி ஜேஇஇ தேர்வை எழுத வேண்டும்.
பொறியியல் படிப்பில் சேர்வதர்றான ஏஐஇஇ தேர்வு எழுத வேண்டும்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத் தேர்வான ஏஐபிஎம்டி.
ராணுவ வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு.
இந்திய கப்பற்படையில் தொழில்நுட்பப் பிரிவிற்கான தேர்வு.
பாதுகாப்புத் துறையில் உதவி ஆய்வாளர், கிளெர்க் பதவிற்கான தேர்வு
ரயில்வேயில் சிறப்பு கிளெர்க் பயிற்சி பெறுவதற்கான தேர்வுகளை எழுதலாம்.

பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள்
ஐஐஎம்மில் முதுகலை சேர விரும்பும் மாணவர்கள் கேட் தேர்வு எழுதலாம்.
வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜிஆர்இ தேர்வு.
எம்.டெக்., எம்.இ. படிப்பிற்கான கேட் தேர்வு.
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்.
வங்கிகள், நபார்ட், காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு.
ஆர்பிஐயில் பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள்.
பி.எட். படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us