தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பணி திருப்தியின்மை நிலைகள்

பணி திருப்தியின்மை நிலைகள்

பணி திருப்தியின்மை நிலைகள்


ஜன 11, 2012 12:00 AM

ஜன 11, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 11, 2012 12:00 AM ஜன 11, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் வாழ்க்கையின் ஆதாரம் நாம் பார்க்கும் பணி. ஆனால், பலருக்கு, பணி அதிருப்தியை தவிர்க்கவே முடிவதில்லை. பணி திருப்தியின்மை என்ற நிலையில் பல வகைப்பாடுகள் உண்டு. உங்களை நீங்கள் அறிந்துகொள்ளுதல் மற்றும் உங்கள் முன்பாக இருக்கும் பிரச்சினைகள் போன்ற அம்சங்கள், உங்கள் பணிநிலையில் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பணி திருப்தியின்மை நிலைகளைப் பற்றி தற்போது விரிவாக காணலாம்,

நிலை 1

பணி சூழல் மாறுபாடு, எதிர்மறை நிறுவன கலாச்சாரம், மோசமான நிர்வாகம் மற்றும் தகவல்தொடர்பு, அளவுக்கு மிஞ்சிய வேலைப்பளு, நிர்வாகத்தில் ஏற்படும் தேவையற்ற மாற்றங்கள், வேலை நேரத்தில் மாற்றம், ஊதியத்தில் மாற்றம், ஊக்கத்தொகை மற்றும் முன்தேவைகள், பயணங்கள் போன்றவை இந்தநிலை பணி அதிருப்திக்கு முக்கிய காரணங்கள். இதுபோன்ற அம்சங்கள், ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது.

நிலை 2

குறைவான வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி, பணிப் பாதுகாப்பின்மை மற்றும் நிலையற்ற தன்மை போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுதல், இணைப்பு நடவடிக்கை மற்றும் நஷ்டத்தினால் ஆட்குறைப்பு செய்தல், விலைக்கு வாங்குதல், பணி இடமாற்றம் செய்தல் மற்றும் பணியின் சரியான தன்மை விளங்காதிருத்தல் போன்றவை முக்கிய காரணங்கள்.

கீழே சில கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஏதேனும் 3 கருத்துக்கள் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், நீங்கள் பணி அதிருப்தியால் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

* கடந்த 5 அல்லது 3 வருடங்களுக்கு முன்பாக இருந்ததைவிட, எனது தொழிலில் தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளன.

* நான் எனது நிறுவனத்தில் புதிய விஷயங்களைக் கற்பதோடு, இங்கே எனக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

* எனது வேலை எனது கட்டுப்பாட்டில் இருப்பதாக உணர்கிறேன்.

* மாற்றம் மற்றும் நிலையின்மை ஆகியவற்றுடன், சிறப்பான செயல்பாட்டின் மூலமாக என்னால் ஒத்தியங்க முடியும்.

* எனது தொழில்துறை நிலையாக இருப்பதால், என்னால் நல்ல வேலையில் நீடித்துப் பணியாற்ற முடியும்.

* எனக்கிருக்கும் வாய்ப்புகள் பற்றி எனக்கு நன்றாக தெரியுமென்பதால், மாற்று வாய்ப்புகளையும் என்னால் பெற முடியும்.

* எனது தொழில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் போக்குகளோடு என்னால் ஒத்துபோக முடியும்.

* ஒரே தொழிலில் அடுத்த 10 வருடங்களுக்கு என்னால் பணிபுரிய முடியும்

* புதிய மாற்றங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் புகுத்துதல் ஆகியவற்றால், எனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு நிகழும் என்று நான் நினைக்கவில்லை.

* நட்டம் அல்லது இணைப்பு நடவடிக்கைகளால், ஆட்குறைப்பு நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை.

நிலை 3

உங்களின் திறன், அறிவு மற்றும் ஆளுமைத் தன்மை போன்றவை உங்களின் பணியோடு ஒத்துப்போகாத நிலை மற்றும் ஒருதலைப்பட்சமான மனப்போக்கு போன்றவை இந்த நிலையில் அடங்கும். இந்நிலைக்கு உதாரணமாக சில கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் 3 கருத்துக்கள் உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும், நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.

* நான் செய்யும் வேலை எனக்கு பிடித்திருக்கிறது.

* எனது அன்றாட அலுவல் வேலைகளை நான் அனுபவித்து செய்கிறேன்

* எனது தொழிலில் நான் சிறந்தவனாக இருக்கிறேன்

* எனது திறமைகள் முழுஅளவில் எனது தொழிலுக்குப் பயன்படுகிறது.

* நான் பார்க்கும் வேலையானது, எனது திறன் மற்றும் அறிவின் அடிப்படையிலானது

* எனக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சியை எனது பணியின் மேம்பாட்டிற்காக என்னால் பயன்படுத்த முடியும்.

* எனது பணியுடன் எனது ஆளுமை ஒத்துப்போகிறது.

* எனது பணியுடன் எனது ஆர்வமானது நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.

* எனது பணியில், படைப்புத்திறனையும், சுய வெளிப்படுத்தலையும் மேற்கொள்கிறேன்.

* எனது பணியில் வெற்றிகரமாய் செயல்படுவதாய் உணர்கிறேன்.

நிலை 4

தொழில் சுய-திருப்தியின்மை

உங்களது வாழ்க்கையின் அர்த்தம், மதிப்பு, உங்களது கடமை, தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள், ஆசைகள் போன்றவை குறித்து நீங்கள் ஆராயத் தொடங்குகையில் உங்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. இந்த வாதத்தை உறுதிப்படுத்த, கீழே சில கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் மூன்று கருத்துக்கள் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றாலும், நீங்கள் பணிசார்ந்த சுய-திருப்தியின்மையினால் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

* எனது பணியானது, எனது வாழ்விற்கு அர்த்தத்தையும், மதிப்பையும் கொண்டு வருகிறது

* எனது விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கேற்ப, இந்த தொழிலை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

* எனது பணி நடவடிக்கைகள் தொடர்பான அகப்பார்வை மற்றும் நல்ல அறிவு எனக்கு உண்டு.

* பிற பணிகள் தொடர்பாகவும், எனக்கு அகப்பார்வை மற்றும் அறிவு உண்டு.

* பணியில், பல புதிய திறன்களை நான் மேம்படுத்தி வருகிறேன்.

* எனது பணி சாதனைகள் எனக்கு திருப்தியைத் தருகின்றன.

* பணியில் எனது தற்போதைய நிலையினைப் பற்றி நான் திருப்தியடைகிறேன்.

* எனது பணியும், தனிப்பட்ட வாழ்க்கையும் சமநிலையில் உள்ளன.

* நான் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான வளர்ச்சியைப் பெற்று வருகிறேன்.

* எனது தொழிலுக்கான எதிர்கால இலக்கையும், அதை அடைவதற்கான வியூகத்தையும் கொண்டுள்ளேன்.

நிலை 5

தனிப்பட்ட வாழ்க்கை திருப்தியின்மை

இந்நிலை, உங்களின் தனிப்பட்ட மனச்சிக்கலைப் பொறுத்தது. தோல்வி, துன்பம், ஏமாற்றம், சந்தேகம், விவாகரத்து, இறப்பு, நோய், இழப்புகள் மற்றும் ஆளுமை சிக்கல்கள் போன்ற பலவித எதிர்மறை விளைவுகளால் ஏற்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இந்நிலையானது, உங்களின் தொழிலை பெரிதும் பாதிக்கிறது. இந்த நிலையை உறுதிப்படுத்த கீழே சில கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், குறைந்தது 3 கருத்துக்கள் உங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால்கூட, நீங்கள் தனிப்பட்ட வாழ்க்கை திருப்தியின்மையால் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

* எனது தனிப்பட்ட வாழ்க்கை நேர்மறையாக உள்ளது மற்றும் நான் சந்தோஷமான மனிதன்.

* எனது நிலையில் நான் சவுகரியமாக உணர்கிறேன்.

* எனக்கு ஆதரவான குடும்பத்தையும், நண்பர்களையும் கொண்டுள்ளேன் மற்றும் அவர்களுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.

* எனக்கு வலுவான தன்னம்பிக்கை உண்டு மற்றும் பிறரிடமும் நல்ல முறையில் பழகுகிறேன்.

* எனது தோல்விகள் மற்றும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுகிறேன்.

* எனது சுய நியாயம் மற்றும் மனசாட்சிக்கேற்ப, சில முயற்சிகளை மேற்கொள்கிறேன்.

* எனது சொந்த வாழ்க்கை மற்றும் எனது முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்.

* அவ்வப்போது ஏற்படும் சில பொருளாதார சிக்கல்களின் காரணமாக, நான் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

* இழப்புகளை சரிசெய்யவும், சூழலுக்கேற்ப மாறிக்கொள்ளவும் பழகியுள்ளேன்.

தொழிலை மாற்றுவதற்கான தடைகள்

சிலர், பகுப்பாய்வு செய்து, தங்களின் தொழிலை மாற்றுவதற்கு விரும்பினாலும், அதில் அவர்களுக்கு தடைகள் உள்ளன. அதில் சில பொதுவான தடைகள்;

பணிப் பாதுகாப்பு, விட்டுக்கொடுப்பதற்கு விரும்பாமை, சூழ்நிலைக்கு மிகவும் நெருங்கி வருதல், பணி விளைவுகளைப் பற்றி பயம் கொள்ளுதல், உங்களின் சிறந்த வேலையைப் பற்றிய தெளிவான புரிதலின்மை மற்றும் பணி மாறுவதற்குரிய சரியான நேரத்திற்கு காத்திருத்தல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us