தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பல வாய்ப்புகளைக் கொண்ட அறிவுப் பொறியியல் படிப்பு

பல வாய்ப்புகளைக் கொண்ட அறிவுப் பொறியியல் படிப்பு

பல வாய்ப்புகளைக் கொண்ட அறிவுப் பொறியியல் படிப்பு


பிப் 10, 2012 12:00 AM

பிப் 10, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 10, 2012 12:00 AM பிப் 10, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அறிவு பொறியியல் என்பது, செயற்கை நுண்ணறிவுக்குள், அறிவு அடிப்படையிலான அமைப்புகளை மேம்படுத்துவதாகும். அந்த அமைப்புகள் என்பவை, நடைமுறை உலக சிக்கல்களுக்கு தீர்வை அளிக்கக்கூடிய அதிக அறிவு, விதிமுறைகள் மற்றும் பகுப்பாய்வு மெக்கானிஸம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம்கள் ஆகும்.

வேறுவிதமாக சொல்வதென்றால், அறிவுப் பொறியியல் என்பது, கணினி அமைப்புகளில் எழும் பல்வேறு விதமான சிக்கல்களை களைவதற்கு தேவைப்படும் ஆற்றல்வாய்ந்த ஒருங்கிணைந்த மனித அறிவுத் தொகுதியாகும்.

தற்போதைய நிலையில், அறிவு அடிப்படையிலான அமைப்புகளை கட்டமைப்பது, பராமரிப்பது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்தத் துறை குறிக்கப்படுகிறது.

பொதுவான வகையில், சாப்ட்வேர் இன்ஜினியரிங் என்பதில் இது அதிகப் பங்கு வகிக்கிறது மற்றும் தரவுதளம், தரவு கண்டுபிடித்தல், எக்ஸ்பெர்ட் அமைப்பு, முடிவு ஆதரவு அமைப்பு மற்றும் பூகோள தகவல் அமைப்பு உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு(Artificial knowledge) போன்ற கணிப்பொறி அறிவியல் களங்களில் பயன்படுத்தப்படுகிறது.

அறிவுப் பொறியியல் என்பது கணித தர்க்கத்துடன்(Mathematical Logic) தொடர்புடையது. அதேபோன்று, அறிவுப் பொறியியலானது, Socio-cognitive aggregates என்ற அம்சம், அறிவை உற்பத்தி செய்யும் Cognitive science மற்றும் Socio-cognitive engineering ஆகியவற்றில் முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது மற்றும் மனிதனின் பகுப்பாய்வு மற்றும் தர்க்க ஆற்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் மீது நமக்குள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அறிவுப் பொறியாளர்களுக்கு, ஐடி துறையில் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உள்ளன. சென்னையிலுள்ள SRM பல்கலைக்கழகம், இத்துறையில் முதுநிலைப் படிப்பை வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us