பிப் 25, 2012 12:00 AM
பிப் 25, 2012 12:00 AM
பல்வேறு தளங்களில் தடம் பதிக்கத் துவங்கியிருக்கும் இந்திய தொழில் துறையில், "செமி கண்டக்டர்' வடிவமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.
"பேப்லஸ் மாடல்' எனப்படும் புதிய டிசைனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், தற்போது "செமி கண்டக்டர்' டிசைனிங்கில் புதிய நிறுவனங்கள் ஏராளமாக செயல்படத் துவங்கியுள்ளன. தற்போது இந்தியாவின் "செமிகண்டக்டர்' களுக்காக பல நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சி வேகம், சாப்ட்வேர் துறை வேகத்துக்கு இணையாக உள்ளது. 2010ம் ஆண்டில், இந்திய "செமிகண்டக்டர்' துறையின் உற்பத்தி 58 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவில் தற்போது 150க்கும் மேலான "சிப் டிசைன்' மற்றும் 250க்கும் மேலான "எம்படேடு சிஸ்டம்' நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தற்போது 20 ஆயிரம் இன்ஜினியர்கள் பணி புரியும் இத்துறையில், அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 20 ஆயிரம் இன்ஜினியர்கள் தேவைப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 ஆயிரம் டெக்னீசியன்களும், 1,500 ஊழியர்களும் தேவைப்படுகின்றனர்.
டிஜிட்டல் டிசைன் அடிப்படை, வி.எச்.டி.எல்., வெரிலாக், சிமுலேஷன் மற்றும் சிந்தசிஸ் டூல்ஸ், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர் ஆகியவற்றில் திறனுள்ளவருக்கு இத்துறையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. துவக்கத்தில் "சிப் டிசைனில்' 3 மாத குறுகிய கால பயிற்சி பெற்றாலே போதும். புனேயிலுள்ள பிட்மேப்பர் இன்டக்ரேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம், வி.எல்.எஸ்.ஐ., டிசைனர்களுக்கான சிறப்புப் படிப்பை நடத்துகிறது.
பெங்களூருவிலுள்ள சிடாக் நிறுவனம் "எம்படேடு டிசைன் சிஸ்டம்ஸ்' பிரிவில் டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இப்படிப்புகளை முடித்தாலே "செமி கண்டக்டர்' துறையில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.
