தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பி.ஏ. சமையல் கலைப் படிப்பும், வாய்ப்புகளும்

பி.ஏ. சமையல் கலைப் படிப்பும், வாய்ப்புகளும்

பி.ஏ. சமையல் கலைப் படிப்பும், வாய்ப்புகளும்


மார் 07, 2012 12:00 AM

மார் 07, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 07, 2012 12:00 AM மார் 07, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

Culinary Art என்பது, உணவு, உணவு, உணவு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. BA Culinary Art  என்ற பெயரில் வழங்கப்படும் படிப்பில், உணவை எப்படி சமைப்பது, எவ்வாறு தயார் செய்வது, அதை எப்படி கலைநயத்துடன் பரிமாறுவது என்பது உள்ளிட்ட பலவிதமான அம்சங்களைப் பற்றி படிப்பதாகும். உணவின் மேல் காதலும், விருப்பமும் உள்ள அனைவருக்கும் இது ஏற்ற படிப்பு.

பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு என்ன செய்யலாம் என்று திணறிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, இந்த BA Culinary Art படிப்பு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். உலகிலுள்ள எத்தனையோ விதமான கலைகளில், உணவு சமைத்தல் என்பது மிக பிரதானமான கலையாகும். ஏனெனில், மனிதன் உயிர் வாழ்தலின் ஆதாரமே உணவில்தான் அடங்கியுள்ளது.

பணி வாய்ப்புகள்

ஹோட்டல்கள், விமானப் போக்குவரத்து துறை, ரயில்வே துறை, சுற்றுலாத் துறை, மருத்துவமனைகள், சில்லறை மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள், Culinary Art துறை பட்டதாரிகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

கற்றுத்தரப்படும் அம்சங்கள்

இந்த படிப்பானது, சமைத்தல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல், உணவை அழகுப்படுத்தல், காய்கறி, பழங்கள் நறுக்குகையில் கத்தியைப் பயன்படுத்தும் கலை, பழம், வெண்ணெய் மற்றும் காய்கறிகளை செதுக்குதல், உணவை தட்டில் வைத்து அழகாக பரிமாறுதல், உணவு புகைப்படக்கலை, ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் மேலாண்மை போன்ற விஷயங்களைக் கற்றுத்தருகின்றன.

இப்படிப்பில் வழங்கப்படும் சிறப்பு பயிற்சிகள், ஒரு உணவு சேவை செயல்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவைப்படும் அவசியமான சிந்தனைத் திறன்களை ஊட்டுகின்றன. மேலும், பலவிதமான நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வது, ஒரு குழுவை நிர்வகிப்பது, ஊட்டச்சத்து தொடர்பான தொடர் கண்காணிப்பை மேற்கொள்வது, மெனு மேம்பாடு மற்றும் உணவை சந்தைப்படுத்தல் போன்ற பல விஷயங்களையும் இந்தப் படிப்பின் மூலமாக கற்றுக்கொள்ளலாம்.

பணி நிலைகள்

BA Culinary Art படிப்பை முடித்தவர், சமையலறை மேலாளர், Sous-chef, banquet chef, restaurant chef, personal chef, உணவு சேவை இயக்குநர், உணவு அலங்கரிப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சமையல்காரர் போன்ற பலவிதமான பணிகளில் அமர்த்தப்படுகிறார்.

சம்பளம்

ஹோட்டல் துறையைப் பொறுத்தமட்டில், மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் என்ற நிலையில் புதிதாக தொழிலுக்கு வரும் ஒருவர், மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்.

Culinary Art பாடங்கள்

Culinary Skill, Baking & Patisserie, International Food Safety & Nutrition, Food Cost & Inventory Management, Global Cuisine and Gastronomy, Food Styling & Presentation

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us