தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எம்.பி.ஏ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள்

எம்.பி.ஏ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள்

எம்.பி.ஏ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள்


மார் 18, 2012 12:00 AM

மார் 18, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 18, 2012 12:00 AM மார் 18, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர் சமூகத்தில் எம்.பி.ஏ படிப்பது, ஒரு பொது கலாச்சாரமாகவே மாறிவிட்டது. சரியான பணிவாய்ப்புகள் கிடைக்குமா என்பதைப் பற்றி திட்டமிடாமலேயே பலர் அப்படிப்பை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், கூடுதல் தகுதிக்காக அப்படிப்பை மேற்கொள்கின்றனர். எது எப்படியிருந்தாலும், எம்.பி.ஏ படிப்பில் சேர்வதற்கான பொது விதிமுறைகள் பற்றி தற்போது காணலாம்.

தகுதிகள்

ஒருவர் எந்தப் பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலும், அவர் MBA படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேர வயதுவரம்பு எதுவும் இல்லையென்றாலும், சில கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டுள்ளன.

நுழைவுத்தேர்வு

நுழைவுத் தேர்வு என்பது, எழுத்துத்தேர்வு(written test), குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இவைத்தவிர, ஒரு மாணவரின் சிறந்த மதிப்பெண்கள் மற்றும் படிப்பின் போதான சாதனைகள் மற்றும் பணி அனுபவம் ஆகியவையும் கணக்கில் கொள்ளப்படும்.

கட்டணம்

ஒரு தனியார் கல்லூரியைப் பொறுத்தவரை, கட்டணமானது ரூ.3 முதல் 4 லட்சம் வரை இருக்கும். ஆனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் கட்டணம் மிகவும் குறைவு.

நுழைவுத் தேர்வுக்கு தயாராதல்

எழுத்துத் தேர்வு

ஒவ்வொரு கல்வி நிறுவனமும், மாணவனின் ஒவ்வொருவிதமான திறனை சோதிப்பதற்காக நுழைவுத்தேர்வை நடத்தினாலும், பொதுவான முறையில், ஒரு மாணவனின் Quantitative, verbal and data interpretation போன்ற திறன்களை சோதிப்பதற்கே அத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வில் வெற்றிபெற, நீங்கள் தொடர்ச்சியான மற்றும் கடினமான பயிற்சியை மேற்கொள்வது அவசியம். உங்களுக்கு எது கடினமோ, அதில் அதிகம் கவனம் செலுத்துங்கள். அதிகமான மாதிரித் தேர்வுகளை(mock test) எழுதி பார்ப்பது உங்கள் திறனை மேம்படுத்த உதவும்.

குழு விவாதம்

உங்களது விழிப்புணர்வு, நீங்கள் எந்தளவிற்கு சிறப்பாக வேலை செய்வீர்கள் மற்றும் ஒரு அணியை எவ்வாறு வழிநடத்துவீர்கள் என்பதை சோதித்தறிய, இந்தக் குழு விவாதம் நடத்தப்படுகிறது. இந்தக் குழு விவாதத்தை நடத்துபவர், ஒரு மாணவரிடம் கணிக்கும் விஷயங்கள் என்னவெனில், ஒரு கலந்துரையாடலை அவர் எவ்வாறு ஒருங்கிணைக்கிறார், தலைப்பிலிருந்து விலகிச் செல்லும் விவாதத்தை, எவ்வாறு மறுபடியும் சரியான பாதைக்குத் திருப்புகிறார், பயனுள்ள வகையில் எப்படி பங்காற்றுகிறார் மற்றும் தேவையான இடங்களில் எப்படி முக்கியமான கருத்துக்களை முன்வைக்கிறார் போன்ற விஷயங்கள் கணிக்கப்படுகின்றன.

இந்தக் குழு விவாதத்தில், உங்களது கருத்தை நயமாக வலியுறுத்துவது ஒருபுறம் இருந்தாலும், அதற்காக, பிறரின் கருத்துக்களை அலட்சியம் செய்யக்கூடாது. எனவே, ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, ஒரு இறுதி முடிவுக்கு வரும் முன்பாக, அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு

இந்த செயல்முறையின்போது, பல கல்லூரிகள், ஒரு மாணவரின் பின்னணி மற்றும் கல்விநிலைய பின்புலங்களை மதிப்பில் எடுத்துக் கொள்வதோடு, அவரின் உள்ளடக்கம் மற்றும் ஒட்டுமொத்த வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன. மேலும், ஒரு மாணவரின் அசல் சிந்தனை திறனுக்கு மதிப்புக் கொடுக்கப்படுகிறது.

எனவே, நேர்முகத்தேர்வின்போது நீங்கள், நீங்களாகவே இருங்கள். நேர்முகத் தேர்வை நடத்துபவர்களை கவர்வதற்காக எதையும் செயற்கையாக கூற முயல வேண்டாம். இதைத்தவிர, MBA படிப்பை தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான காரணத்தையும் வகுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அதுதொடர்பான உங்களது தெளிவான பதில், சம்பந்தப்பட்டவர்களைக் கவரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us