sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்?

ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்?

ஏன் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இன்று நாம் அனுபவிக்கும் பல வசதிகளுக்கு, இன்ஜினியரிங் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தான் காரணம். இந்த துறை, நாளுக்கு நாள் மாற்றங்களை சந்திக்கிறது. வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கருவிகள், உபகரணங்களை இன்ஜினியர்கள் வடிவமைக்கின்றனர். எனவே, இந்த துறையில் வாய்ப்புகள் இன்னும் பெருகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இன்ஜினியரிங் படிப்பு, என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டும் படிக்கும் படிப்பாக இருந்தது. இன்று இன்ஜி., கல்லுõரிகளில் படிக்கும் மாணவர்களில் அதிகமானோர், கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப் பட்டுள்ள கல்லுõரிகளின் எண்ணிக்கை, இந்தாண்டு கவுன்சிலிங்கின் போது 500 ஐ தாண்டி விட்டது. இது இன்ஜினியரிங் படிப்புக்கு மாணவர்களிடம், இருக்கும் ஆர்வத்தையே காட்டுகிறது.

வீடியோ கான்பரன்சிங்

இன்று ஒரு பல்கலைக்கழக ஸ்டுடியோவில் நடத்தும் பாடங்கள், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் இணைக்கப்பட்ட பிற கல்லுõரிகளையும், சென்று சேர்கிறது. இன்ஜினியரிங் உதவியால் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சியை எட்ட முடியும்.

இன்று மனிதனின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது; தகவல் தொடர்பு வசதிகள் அதிகரித்துள்ளன; பொருளாதார வளர்ச்சி காரணமாக வசதிகள் பெருகியுள்ளன.

இம்மாற்றங்களை எதிரொலிக்கும் விதமாக நானோ டெக்னாலஜி, லாஜிஸ்டிக்ஸ், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர வேண்டியது அவசியம்.

சமுதாய சிக்கல்களை தீர்க்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை இன்ஜினியர்கள் உருவாக்க வேண்டும். மருத்துவம், நவீன கம்ப்யூட்டர்கள், தொலைதொடர்பு போன்ற துறைகளின் முன்னேற்றத்தை ஏற்படுத்த இன்ஜினியரிங் அவசியம். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், நீர்வளம், வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த தேவைகளை இன்ஜினியரிங் துறையின் உதவியுடன் தான் சமாளிக்க முடியும்.

2020ல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பது இன்ஜினியர் களுக்கு சவாலாக அமையும். எனினும் திறமையானவர்களுக்கு வாய்ப்புகளும் அதிகரித்திருக்கும். தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு, பார்மாசூட்டிக்கல் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.

புதிய படிப்புகள்

பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி, இன்பர்மேஷன் அண்டு கம்யூனிகேஷன் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், போட்டோனிக்ஸ் போன்ற துறைகள் எதிர்காலத்தில் வளர்ச்சியை சந்திக்கும் என நம்பப்படுகிறது. காயமடைந்த, பாதிப்படைந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை இல்லாமல், நரம்புகளையும், திசுக்களையும் சீராக்கி குணப்படுத்த பயோடெக்னாலஜி ஆய்வுகள் நடந்து வருகின்றன. பயோடெக்னாலஜி தொழில்நுட்பத்துக்கும் இன்ஜினியரிங் அறிவு அவசியம்.

நானோ சயின்ஸ், நானோ இன்ஜினியரிங் ஆய்வுகள் பயோஇன்ஜினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளுக்கும் உதவுகின்றன. செயற்கை உறுப்புகளை தயாரிக்கவும், சுற்றுச்சூழலை துõய்மைப்படுத்தவும் நானோபொருட்கள் உதவுகின்றன. பொருளின் அளவை குறைக்கவும், அதன் திறனை மேம்படுத்தவும் போட்டோனிக்ஸ் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது.

இயற்கை பேரிடர்களால் பெருமளவில் மனிதர்களின் இடமாற்றம் நிகழ்கிறது. இவற்றை முன்கூட்டியே அறியும் வகையிலான பொருட்களை உருவாக்குவது பற்றி மெட்டீரியல் சயின்ஸ் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

எதிர்காலத்தில்...

தகவல் தொழில்நுட்பத்துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள் திறனும், சக்தியும் எதிர்காலத்தில் மேம்படும் போது அவற்றை பயன்படுத்தும் இன்ஜினியர்கள் மேலும் பல சாதனைகள் புரிய முடியும். இவர்கள் தொழில்நுட்ப, பொருளாதார, சமூக, அரசியல் வரையறைக்குள் செயல்பட்டு சாதிக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us