sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/எங்கே இருக்கிறது இந்தியா?

எங்கே இருக்கிறது இந்தியா?

எங்கே இருக்கிறது இந்தியா?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உலகின் சிறந்த டாப்200 பல்கலைகளில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்ளிட்ட ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம் பெறவில்லை.

உலகின் சிறந்த பல்கலைகள் பற்றிய கருத்துக் கணிப்பை இங்கிலாந்தின் Times Higher Education மற்றும் கிகு நிறுவனம் இணைந்து QS World Ranking என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்தாண்டுக்கான கணிப்பு வெளியாகியுள்ளது.

இப்பட்டியலில் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. முதல் 10 இடங்களில், 6 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. மற்ற 4 இடங்களை பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பெற்றுள்ளன. டாப்  200 பட்டியலில் இடம் பெற்றுள்ளவற்றில், 75 அமெரிக்காவைச் சேர்ந்தவை.

அடுத்தபடியாக, பிரிட்டன் சார்பில் 32 கல்வி நிறுவனங்களும், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து சார்பில் தலா 12 கல்வி நிறுவனங்களும், கனடா சார்பில் 9 கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. தைவான், பிரேசில், சிங்கப்பூர், தென் ஆப்ரிக்கா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தும் ஒரு பல்கலைக்கழகம் கூட பட்டியலில் இடம் பெற முடியாதது வேதனைக்குரிய விஷயம். இந்திய பல்கலைக்கழகங்கள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பாருங்கள்:

கல்வி நிறுவனம் ரேங்க்
ஐ.ஐ.டி., டில்லி 212
ஐ.ஐ.டி., மும்பை 227
ஐ.ஐ.டி., கான்பூர் 278
ஐ.ஐ.டி., சென்னை 312
ஐ.ஐ.டி., காரக்பூர் 349
ஐ.ஐ.டி., ரூர்க்கி 450
ஐ.ஐ.டி., கவுகாத்தி 551

முதல் பத்து சிறந்த கல்வி நிறுவனங்கள்

1. மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி, அமெரிக்கா
2. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன்
3. ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா
4. யுனிவர்சிட்டி காலேஜ், லண்டன், பிரிட்டன்
5. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரிட்டன்
6. இம்பீரியல் காலேஜ், லண்டன், பிரிட்டன்
7. யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா
8. சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
9. பிரிஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
10. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி, அமெரிக்கா

இந்த தர நிர்ணயக் குழு, மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதில் பாரிஸ், லண்டன், பாஸ்டன் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.

முதல் பத்து சிறந்த கல்வி நகரங்கள்

1. பாரிஸ், பிரான்ஸ்
2. லண்டன், பிரிட்டன்
3. பாஸ்டன், அமெரிக்கா
4. மெல்போர்ன், ஆஸ்திரேலியா
5. வியன்னா, ஆஸ்திரியா
6. சிட்னி, ஆஸ்திரேலியா
7. ஜுரிச், சுவிட்சர்லாந்து
8. பெர்லின், ஜெர்மனி
9. டப்ளின், அயர்லாந்து
10. மான்ட்ரீல், கனடா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us