sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சாதாரணமா சமூகவியல்?

சாதாரணமா சமூகவியல்?

சாதாரணமா சமூகவியல்?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சமூகவியல் என்பது, மனிதன், வாழும் சமூகத்துக்குள், ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்பு, உறவுகளைப் பேணுவது, கலாச்சார பாதிப்பு, தனி மனித பிரச்னை, உலகளாவிய பிரச்னை போன்றவற்றை ஆராய்கிறது.

மனிதனின் நடத்தை, அவன் வாழும் சமூகம், மதம், சட்ட விதிகளுக்கு கட்டுப்படுவது, நடத்தைக் கூறு, குறிப்பிட்ட சமூக நடத்தைக்கான காரணம், தொடர்பு, சமுதாயத்தில் தனிமனிதனின் பங்கு என்ன போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருவதே சமூகவியல்.

வழங்கப்படும் படிப்புகள்

சமூகவியலில் பி.ஏ/எம்.ஏ/எம்.எஸ்சி/எம்.பில்/பிஎச்.டி., போன்ற படிப்புகளை படிக்கலாம்.

கல்வித்தகுதி: பிளஸ் 2வில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்பில் சேரலாம்.

பிற தகுதிகள்

தொழில்துறை சமூகவியலார் ஆவதற்கு அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, கல்வியறிவு, மக்களின் ஒத்துழைப்பு பெறுதல், புரிந்து கொள்ளுதல், குழு செயல்பாடு போன்ற தகுதிகள் அவசியம்.

வேலை வாய்ப்புகள்

பி.ஏ., சமூகவியல் பட்டம் பெற்றவர்கள், இதழியல், சுகாதார நிர்வாகம், மத்திய மாநில அரசு பணிகள், கல்வி நிர்வாகம், சட்டம், ராணுவம், வணிகம், குற்றவியல் நீதித்துறை, சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம்.

கிடைக்கும் சம்பளம்

இத்துறையில் புதிதாக சேருபவருக்கு மாதம் 8,000 முதல் 18,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பொறுத்து மேலும் சம்பளம் உயரும். விவரங்களுக்கு www.appliedsoc.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us