அக் 25, 2012 12:00 AM
அக் 25, 2012 12:00 AM
ஆசிரியர்கள், அறிவு, ஆற்றல், அணுகுமுறை, நடத்தையைக் கொண்டு, மாணவர்களுக்கு கல்விப் பயிற்சி அளிக்கிறார்கள். கற்பிக்கும் செயல்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி முறைகள் மற்றும் கொள்கைகள், ஆகியவற்றைப் பற்றி படிப்பதே ஆசிரியர் கல்வி.
வழங்கப்படும் படிப்புகள்
D.T.Ed., ( கல்வியியல்) 2 ஆண்டு
B.Ed., ( கல்வியியல்) 1 ஆண்டு
M.Ed., ( கல்வியியல்) 1 ஆண்டு
கல்வித் தகுதி
1. நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆவதற்கு பிளஸ் 2 வில் தேர்ச்சி, அத்துடன் கல்வியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆவதற்கு, கலை அல்லது அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம் அத்துடன் கல்வியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. மேல்நிலை பள்ளி ஆசிரியர் ஆவதற்கு, கலை அல்லது அறிவியல் படிப்பில் முதுகலை பட்டம் அத்துடன் கல்வியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர் ஆவதற்கு, கலை அல்லது அறிவியல் பாடத்தில் முதுகலை பட்டம், அத்துடன் கல்வியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5. கல்வியியல் கல்லுõரிகளில் ஆசிரியர் ஆவதற்கு கலை அல்லது அறிவியல் படிப்பில் முதுகலை பட்டம், கல்வியலில் முதுகலை பட்டம் அத்துடன் எம்.பில்/பிஎச்.டி., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
6. உடற்கல்வி ஆசிரியர் ஆவதற்கு கலை அல்லது அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம், அத்துடன் உடற்கல்வியியலில் இளங்கலை பட்டம் (B.P.Ed.,) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
7. உடற்கல்வி கல்லுõரிகளில் ஆசிரியர் ஆவதற்கு கலை அல்லது அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டம் அத்துடன் உடற்கல்வியியலில் முதுகலை பட்டம் (M.P.Ed.,) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எம்.பில்/ பிஎச்.டி., பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
8. இசை, ஓவியம், கைத்தொழில் போன்ற சிறப்பு துறைகளில் ஆசிரியராக பணியாற்ற, சம்பந்தப்பட்ட துறைகளில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லுõரிகள் இப்படிப்புகளை வழங்குகின்றன.
கிடைக்கும் சம்பளம்
இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மாதம் 12,000 முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
