sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சிறந்த டிப்ளமோ படிப்பு எது?

சிறந்த டிப்ளமோ படிப்பு எது?

சிறந்த டிப்ளமோ படிப்பு எது?


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவம், அறிவியல் மற்றும் கலைக் கல்லுõரி, சட்டம், வேளாண்மை, கால்நடை, நர்சிங், ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளை தேர்வு செய்கின்றனர்.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பெரும்பாலானோர் பிளஸ் 1 படிக்கவே விரும்புவர். இவற்றை தவிர்த்து வேலைவாய்ப்பை உறுதி செய்யும், டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இதனை பிளஸ் 2, பத்தாம் வகுப்பு என இருவருமே படிக்கலாம்.

பிளஸ் 2 படிப்பில் அறிவியல் பிரிவு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள். பிளஸ் 2 கலைப்பிரிவு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்று ஆண்டுகள் படிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லுõரிகள் தவிர, அதிகளவிலான தனியார் பாலிடெக்னிக் கல்லுõரிகள் உள்ளன. டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள், கீழ்க்கண்ட பிரிவுகளை தேர்வு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

* ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering): வாகனங்களின் செயல் திறனை பற்றிய டிப்ளமோ படிப்பு, உலகளவில் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது. இப்போது வாகனங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கவும், வடிவமைக்கவும் தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டன. இந்த பட்டப்படிப்பு இந்த நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில் திறன், தொழில்நுட்பங்கள் முதலியவற்றில் பயிற்சி அளிக்கிறது.

* கட்டடக் கலை (Civil Engineering): சாலை அமைத்தல், விமான நிலையங்கள் பராமரிப்பு, துறைமுக வளர்ச்சி பணி, உயர்ந்த கட்டடங்களை வடிவமைப்பது, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல், நீர் கழிவை அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் முதலிய பணிகளிலும் நவீன கட்டடக் கலை நுட்பங்கள் பயன்படுகின்றன.

* மெக்கானிகல் இன்ஜினியரிங்(டி.எம்.இ.,): ஒரு இயந்திரத்தின் பாகங்களைப் பற்றியும், அவை செயல்படும் விதம் பற்றியும் படிக்கும் படிப்பு. இதில் டிப்ளமோ படித்தவர்கள் பலர் பெரிய நிறுவனங்களில் முக்கியப்பணிகளில் உள்ளனர்.

* கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்: கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொழிற்சாலை, வர்த்தகம், நிர்வாகம் முதலிய துறைகளில் முக்கிய பங்கு வகிப்பதால் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த கோர்ஸ் முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உடனடியாக உள்ளது.

* எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்: எலக்ட்ரானிக்ஸ் பயன்பாடு, மருத்துவமனையில் நோயை கண்டுபிடிக்க உதவும் கருவியில் ஆரம்பித்து தகவல் தொழில் நுட்பம் வரை பரவியுள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும்.

* எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்(டி.இ.இ.இ): தொழிற்சாலைகள் பெருகிவரும் சூழ்நிலையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்பு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறை. இந்த பிரிவு கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us