தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பாதுகாப்பு, போர்திறன் படிப்புகள்

பாதுகாப்பு, போர்திறன் படிப்புகள்

பாதுகாப்பு, போர்திறன் படிப்புகள்


அக் 25, 2012 12:00 AM

அக் 25, 2012 12:00 AM

Follow on GoogleFavourite on Google

அக் 25, 2012 12:00 AM அக் 25, 2012 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு, நம் ராணுவத்தின் போர்முறைத்திறம் போன்றவற்றை படிப்பது, பாதுகாப்பு மற்றும் போர்திறன் (Defence and Strategic Studies) படிப்பின் சிறப்பு. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இப்படிப்பை பள்ளியிலிருந்தே கற்றுத் தருகின்றன.

ராணுவம் சார்ந்த விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், தேசிய பாதுகாப்பு, அணு சக்தி கொள்கை, நிலப்பகுதிகளின் அமைப்பு, போர்குறித்து அறிஞர்களின் கருத்து, ஆய்வுகள், ஆட்சியியல், இதழியல் ஆகியவை பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

ராணுவக்கல்வி: அது தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் பாடத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளன. நம்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன.

நிறுவனங்கள்

* சென்னை பல்கலைக்கழகம், சென்னை

* குருநானக் கல்லுõரி, சென்னை

* புனே பல்கலைக்கழகம், புனே

* பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா

* வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகம், ஜல்கான்

* ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி

* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

* கோல்கட்டா பல்கலைக்கழகம், கோல்கட்டா

வேலை வாய்ப்பு

இத்துறையில் முதுநிலை படித்தவர்கள், தரைப்படை, விமானப்படை, கப்பல்படை, மற்றும் அரசு துறைகளில் கமிஷன் அலுவலராக பணி அமர்த்தப்படுவர். இந்திய பாதுகாப்புத் துறையின் ஆய்வுப்பிரிவில் ஆய்வாளராகலாம்.

யு.பி.எஸ்.சி.,தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இப்படிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே, இத்தேர்வின் வாயிலாக அரசுப் பணியில் இடம் பெறலாம். யு.ஜி.சி, மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த படிப்பில் பி.எச்.டி., படிப்பவர்களுக்கு உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us