அக் 25, 2012 12:00 AM
அக் 25, 2012 12:00 AM
உயிரினங்களின் அமைப்பில், மூலக்கூறு அமைப்பையும், செயல்படும் தன்மையையும் பற்றி படிக்கும் உயிரியலின் ஒரு பிரிவே மூலக்கூறு உயிரியல் (மாலிக்யூலர் பயாலஜி). இதில் ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டின், சிந்தஸிஸ், கட்டுப்பாட்டு அமைப்புகளை பற்றி படிக்க வேண்டும்.
மூலக்கூறு உயிரியலில், முதுநிலை படிப்பு மட்டுமே உள்ளது. பட்டப்படிப்பு அளவிலோ அல்லது பிளஸ் 2 அளவிலோ உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருந்தால் மட்டுமே, முதுநிலை அளவில் இதை படிக்க முடியும். பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் ஜெனிடிக்ஸ், மைக்ரோ பயாலஜி, விலங்கியல் அல்லது தாவரவியல் படித்தவர்கள், இத்துறையில் எம்.எஸ்.சி., படிப்பில் சேர முடியும்.
இதில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள், சி.எஸ்.ஐ.ஆர்., யூ.ஜி.சி நெட் தேர்வுகளையோ அல்லது உயிர் அறிவியல் பிரிவில் ஐ.சி.எம்.ஆர்., ஜே.ஆர்.எப்., தேர்வுகளையோ கட்டாயம் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
பயோ டெக்னாலஜியை ஒரு பாடமாக கொண்டு இன்ஜினியரிங் அல்லது பி.பார்ம்., படித்து, குறைந்தபட்சம் 85 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்வு எழுதியவர்களும், நுழைவுத்தேர்வு அல்லது இன்டர்வியூ மூலமாக ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும்.
கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை
டில்லி பல்கலைக்கழகம், டில்லி
பிரசிடென்சி கல்லுõரி, கோல்கட்டா
வேலை வாய்ப்பு
அறிவியலின் பிற பிரிவுகளை ஒப்பிடும் போது, இப்பிரிவில் போட்டிகள் குறைவுதான். நல்ல கல்வித்தகுதியும், ஈடுபாடும் உள்ளவர்களுக்கு மாலிக்யூலர் பயாலஜி பணி வாய்ப்புகளை தரவல்லது. ஆராய்ச்சி மையங்கள், தனியார் மருந்து கம்பெனிகளின் ஆராய்ச்சி பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.
மருத்துவத்துறை வளர்ச்சி தொடர்புடைய மருந்து பிரிவுகளில் ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடர்புடைய பணிகளில் இவர்கள் ஈடுபடலாம். இன்று உலக அளவில் பேசப்படும் குளோனிங், சப் குளோனிங், சிந்தடிக் ஆர்.என்.ஏ., டிரான்ஸ் கிரிப்ஷன், ஜீன் எக்ஸ்பிரஷன், செல் வளர்ச்சி, செல் தொடர்புடைய அமைப்பு , பல்வேறு தகவல்களை பதிவு செய்தல் போன்ற ஆய்வுக்கூட பணிகளில் வாய்ப்புகளை பெறலாம்.
இங்கு பணிபுரியும் மாலிக்யூலர் பயாலஜிஸ்ட்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
