sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

பொருள் உருவாக்கத்திற்கான பொறியியல்

/

பொருள் உருவாக்கத்திற்கான பொறியியல்

பொருள் உருவாக்கத்திற்கான பொறியியல்

பொருள் உருவாக்கத்திற்கான பொறியியல்


ஏப் 08, 2014 12:00 AM

ஏப் 08, 2014 12:00 AM

Google News

ஏப் 08, 2014 12:00 AM ஏப் 08, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கையாக இருந்த உலகம் மனிதனின் தேவைகளின் காரணமாக செயற்கையான பொருட்களால் நிரம்பி வழிகிறது. ஓவ்வொருவரும் ஒரு பொருளை சர்ந்திருக்கிறோம்.

வீடு, பள்ளி, கல்லூரி, சுற்றுப்புறம் என அனைத்தும் பல்வேறு பொருட்களைக் கொண்டிருக்கிறது. மேலும் உடல்நலம் சார்ந்த எலும்பு சம்பந்தமான அறுவை சிகிச்சைகளிலும் கூட செயற்கையான பொருட்கள் எலும்புகளோடு இணைக்கப்படுகின்றன. இப்படி பொருட்களாலும், பொருட்களின் தேவையாலும் உலகம் இயங்குகிறது.

நம்மைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் வெவ்வேறு விதமான ரசாயன மற்றும் இதர சிறு பொருள்களால் உருவாக்கப்பட்டு தொலைக்காட்சி, பேரூந்து, காற்றாடி என ஒரு முழு வடிவமாக காட்சி தருகிறது. இப்படிப்பட்ட பொருள் உருவாக்கத்தினை உருவாக்கவும், மேம்படுத்தவும் கற்றுத்தரும் பொறியியலே "மெட்டீரியல் இன்ஜினியரிங்". கெமிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கலவையாக இந்தப் படிப்பு விளங்குகிறது.

குறிப்பிட்ட ஒரு பொருள் உருவாக்கத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதனை கண்டுகொள்ளும் வகையில் செராமிக்ஸ், பாலிமெர், காம்போசைட், இன்டர்மெட்டாலிக்ஸ், எலக்ட்ரானிக், மேக்னடிக் மெட்டீரியல் போன்றவற்றைப் பற்றி கற்றுத்தரப்படுகிறது.

வாய்ப்புகள்

படித்த மாணவர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சித் துறையை தேர்ந்தெடுத்து செல்கின்றனர். இந்தியாவில் வளர்ந்து வரும் துறையாக ஆராய்ச்சித் துறை இருக்கிறது. ஆட்டோமொபைல், வெல்டிங், ஸ்டீல் நிறுவனங்களில் மெட்டீரியல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சிறப்பான வரவேற்பு உல்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையிலும் மெட்டீரியல் இன்ஜினியரிங் படித்தவர்களை பணிக்கு அமர்த்துகின்றனர்.

தேவையான திறன்கள்

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் ஆர்வம் இருக்க வேண்டும்.

கடினமான சூழ்நிலைகளிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

ஆராய்ச்சியில் ஈடுபாடு வேண்டும்.

சம்பளம்

மற்ற பொறியியல் துறைகளை ஒப்பிடும்பொழுது மெட்டீரியல் இன்ஜினியரிங் துறையில் சிறப்பான சம்பளத்தைப் பெறலாம். திறன் வாய்ந்த மாணவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.

தகுதி

பிளஸ் 2 படித்திருக்க வேண்டும்.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு "அனைத்து இந்திய பொது நுழைவுத்தேர்வு" (ஏ.ஐ.இ.இ.இ.) அல்லது ஜெ.இ.இ. தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

சிறந்த கல்வி நிறுவனங்களில் சில

நேஷனல் இன்ஸ்டிடீயூட் ஆஃப் ஃபவுண்டரி அன்ட் ஃபோர்ஜ் டெக்னாலஜி, ராஞ்சி.
இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்.
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்.






      Dinamalar
      Follow us