sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

எம்.பி.ஏ., மாணவர்களுக்கு புரபஷனல் அசோசேஷியன்கள் எவ்வாறு உதவுகின்றன?

/

எம்.பி.ஏ., மாணவர்களுக்கு புரபஷனல் அசோசேஷியன்கள் எவ்வாறு உதவுகின்றன?

எம்.பி.ஏ., மாணவர்களுக்கு புரபஷனல் அசோசேஷியன்கள் எவ்வாறு உதவுகின்றன?

எம்.பி.ஏ., மாணவர்களுக்கு புரபஷனல் அசோசேஷியன்கள் எவ்வாறு உதவுகின்றன?


ஏப் 09, 2014 12:00 AM

ஏப் 09, 2014 12:00 AM

Google News

ஏப் 09, 2014 12:00 AM ஏப் 09, 2014 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலாண்மை கல்வி நிறுவனங்களின் ஒவ்வொரு வளாகமும், வேறுபட்ட செயல்படும் கிளப்புகள் மற்றும் அசோசேஷியன்களை கொண்டிருக்கும். அவை, ஆசிரியர்களின் உதவி மற்றும் மேற்பார்வையின் கீழ், மாணவர்களால் கருகொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டு செயல்படும்.

இவைதான், புரபஷனல் நெட்வொர்க்குகளை உருவாக்கி, கட்டமைப்பதற்கான ஒரு நல்ல தொடக்கம். ஒவ்வொரு functional area -வும், தேசிய எச்.ஆர்.டி., நெட்வொர்க் மற்றும் Asia specific மார்க்கெடிங் புரபஷனல் கான்கிளேவ் போன்ற தேசிய மற்றும் சர்வதேச அமைப்பைக் கொண்டிருக்கும். அவை அனைத்தும், மாணவர் உறுப்புத்துவத்தை நோக்கமாக கொண்டவை.

மேலும், சார்டர்ட் பைனான்சியல் அனலிஸ்ட் - அமெரிக்கா, சார்டர்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் மார்க்கெடிங், சார்டர்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட் மற்றும் புராஜெக்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட் போன்ற சான்றளிக்கும் ஸ்பெஷலைஸ்டு அமைப்புகளும் உள்ளன.

மேற்கண்டவை, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளாகும். விரிவான தேர்வு அல்லது ஒருவரின் சொந்த படிப்பில் பெறப்படும் கிரெடிட்டுகள் அடிப்படையில் சான்றிதழ்களை அந்த அமைப்புகள் வழங்கி வருகின்றன.

மேலும், AIMA -வுடன் இணைக்கப்பட்ட 64 உள்ளூர் மேலாண்மை அமைப்புகளும் உள்ளன. மாலைநேர விரிவுரைகள், மாநாடுகள், சிறப்புத்தன்மை வாய்ந்த ஒர்க்ஷாப்புகள் ஆகியவற்றின் மூலமாக அவை நல்ல நடைமுறை அனுபவத்தை தருகின்றன. ஒரு சிறந்த மேலாளராக பரிணமிக்க வேண்டுமென நினைப்பவர், மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

ஆங்கிலப் புலமையின் முக்கியத்துவம்

உலகளவில் பரவலான வகையில், அதிகளவு நபர்களால் பேசப்படும் மொழியாக ஆங்கிலம் இருப்பதால், கார்பரேட் நிறுவனங்களின் மொழியாகவும் ஆங்கிலமே, பெரும்பாலும் இருக்கிறது.

அதுவும், பல தனித்தனி நாடுகளை ஒருங்கிணைத்து, ஒரே நாடாக விளங்கி, பல்வேறு மொழிகள் மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் , ஆங்கிலம் வேறுபாடுகளை களைந்து தொடர்புகொள்ள உதவும் ஒரு பொது மொழியாக திகழ்கிறது. (இந்திய நாடாளுமன்றமே ஆங்கிலத்தின் துணையோடுதான் நடைபெறுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

கார்பரேட் நிறுவனங்கள், உள்நாட்டில் மட்டுமல்ல, உலகளவில் விரிவடைந்து செல்லும் நோக்கத்தைக் கொண்டவை. எனவே, அப்படிப்பட்ட சூழலில், பல்வேறு இடங்களில் பணிபுரியக்கூடிய தங்களுக்கான மேலாளர்கள், ஆங்கில மொழிவன்மை உள்ளவர்களாக இருக்க வேண்டுமென அந்த நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று.

ஆங்கில மொழியை சரளமாக பேசத் தெரிந்திருப்பது என்பது ஒரு முக்கியமான தேவையாகும். அதேசமயம் சரளமாக ஒருவருக்கு பேச வரவில்லை என்பதற்காக, அவருக்கு வாழ்க்கையே இல்லை என்பது அர்த்தமல்ல.

கவனம், மதிநுட்பம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை, ஒருவரை நல்ல ஆங்கிலப் புலமை பெற்றவராக மாற்றும். எனவே, ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் செயல்பாட்டில் ஒருவர் இடைவிடாது கடும் முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் தாய்மொழி பேசாத இதர நபர்களை சந்திக்கும்போது, அவர்களுடன் நமது சிந்தனைகளை தங்கு தடையின்றி பகிர்ந்துகொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us