தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/வெற்றிக்கு இல்லை முற்றுப்புள்ளி!

வெற்றிக்கு இல்லை முற்றுப்புள்ளி!

வெற்றிக்கு இல்லை முற்றுப்புள்ளி!


ஏப் 11, 2016 12:00 AM

ஏப் 11, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 11, 2016 12:00 AM ஏப் 11, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம்மில் எல்லோருக்குமே வெற்றி பெற ஆர்வம் இருக்கும். வெற்றியை வேண்டாம் என்று சொல்வார் யாரும் இல்லை. ஆனால், வெற்றி குறித்த தவறான அர்த்தமும், வரையறையும் பலரை கிணற்று தவளையாக்கி இருப்பதையும் மறுப்பதற்கில்லை!

முதலில் பள்ளிப் படிப்பு, பின் கல்லூரி, உத்தியோகம் என பல நிலைகளில் வெற்றியை உணர்கிறோம். இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதையே வெற்றியாக கருதி அனைவரும் உழைக்கிறோம். அவை அந்தந்த பருவத்தில் சற்று எளிதாகவும் கிடைத்து விடக்கூடியவைதான்!

வாழ்க்கையில் எதிர்பார்த்த அடிப்படை இலக்கை அடைந்து விட்டால், பெரும்பாலானோர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். ஏனெனில், இதற்குமேல் வெற்றிக்கான அர்த்தம் பலருக்கும் புரிவதில்லை. தனக்கு அடுத்து என்ன தேவை என்பதை உணர்ந்தால் தானே இலக்கையும், வெற்றியையும் பற்றி யோசிக்க முடியும்?

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை மட்டுமே, வாழ்க்கையின் வெற்றியாக இந்த சமுதாயம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. எனவே, அடிப்படை இலக்கை எட்டிய, எண்ண ஓட்டத்திலேயே எஞ்சிய காலங்களையும் ஓட்டி விடுகின்றனர். இதுவல்ல வெற்றியின் அடையாளம்!

கனிகளை தரும் மரங்களும் ஒரே ஒரு கனியை தந்து விட்டு, தன் கடமை முடிந்து விட்டது என்று இருந்தால்... என்னாவது? வெற்றி என்பது ஒரு நிறுத்தமோ, இரு வழிப் பாதையோ கிடையாது. அது ஒரு வழிப் பாதை. சென்று கொண்டே இருக்க வேண்டும்.

தாங்கள் பெற்ற வெற்றிகளின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற சாதனையாளர், எவரும் தங்கள் வெற்றியை விட்டுக் கொடுப்பதில்லை. அதை தக்க வைத்துக் கொள்ளவும், அடுத்தடுத்த கட்டத்திற்கு நீட்டிசெல்லவுமே விரும்புவர்.

நீர், ஓடையாக, ஆறாக ஓடிக்கொண்டே இருந்தால்தான் அதற்கு மதிப்பு. அதேபோல் ஒரு வெற்றியில், ஒரே இடத்தில் நின்றுவிடாமல், ஓடிக்கொண்டே இருந்தால் தான் மனிதருக்கும் மதிப்பு!

தாமஸ் ஆல்வா எடிசன், ஜி.டி., நாயுடு போன்றவர்கள் ஒரு கண்டுபிடிப்புடன், வெற்றி பெற்றுவிட்டதாக கருதி, தொடர்ந்து பயணிக்காமல் இருந்திருந்தால் இன்று நமக்கு விஞ்ஞான வளர்ச்சி கிடைத்திருக்காது!

வெற்றி என்பது முற்றுப்புள்ளி அல்ல; நம்மை சரித்திரம் படைக்கவைக்கும் தொடர் புள்ளி!

எம்.விக்னேஷ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us