தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நேரம் நம் கையிலே... சாதனை நம் பையிலே...

நேரம் நம் கையிலே... சாதனை நம் பையிலே...

நேரம் நம் கையிலே... சாதனை நம் பையிலே...


மார் 31, 2016 12:00 AM

மார் 31, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 31, 2016 12:00 AM மார் 31, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘காலம் கண்  போன்றது; கடமை பொன் போன்றது’ என்பார்கள்... உண்மை தான்! இழந்து விட்ட காலம் எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் கிடைப்பதில்லை. மாணவர்களுக்கு இது முற்றிலும் பொருந்தும். ஏனெனில், மாணவர்கள் பலரும் கடைசி நேர வாசிப்பின் போதும், பரீட்சை எழுதும் போதும் தான் காலத்தின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்கின்றனர்!

இளம் பருவத்திலே நேரத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள கற்றுக்கொண்டால், எதிர்காலம் பிரகாசமாகும். சில மாணவர்கள், மதிப்பெண்கள் குறைந்து விட்டதற்கான காரணமாக, ‘நேரம் போதவில்லை’ என்பார்கள். உண்மை அதுவல்ல... கிடைத்த நேரத்தை முறையாக பயன்படுத்த தெரியவில்லை என்பதே!

நேரத்தை சரியாக பயன்படுத்துவதற்கு முதலில் திட்டமிடுதல் அவசியம். எல்லா பாட புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு அமர்ந்தால், எந்த பாடத்திலும் கவனம் செலுத்த முடியாது. பள்ளி வகுப்பில் எப்படி ஒவ்வொரு பாடத்திற்கும் கால அட்டவணை இருக்கிறதோ, அதுபோல  நீங்கள் படிக்க போகும் பாடத்திற்கும், பயிற்சிக்கும் ஒரு அட்டவணை போட்டுக்கொள்ளுங்கள்!

உதாரணமாக, எளிதில் புரிந்து படித்துவிடக்கூடிய பாடங்களுக்கு குறைந்த நேரத்தையும், கடினமாக நீங்கள் நினைக்கும் பாடங்களுக்கு அதிக நேரத்தையும் ஒதுக்கலாம். கடின பாடங்களுக்கு அமைதியான அதிகாலை நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம். கணித சூத்திரங்கள், வேதியியல் உடன்பாடுகள், புரோகிராமிங் போன்றவற்றை ஒரு கையேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டு அவ்வப்போது பார்த்துக்கொள்வது நினைவில் நிற்க உதவும்.

தேர்வறையில், ஒவ்வொரு மணித் துளியும் முக்கியம். எனவே, ‘ஐயோ, நேரம் ஓடுகிறதே?’ என்று நினைத்து இருக்கும் நேரத்தை வீணடிக்காமல், இருக்கும் நேரத்தில் சிறப்பாக செயல்பட முற்படுவதே நலம்!

எளிதான கேள்விகளுக்கு முதலில் பதில் அளித்தல் சிறந்தது. அதிக மதிப்பெண்கள் தரும் கேள்விகளை முதலில் எழுதிவிட்டு, சிறிய கேள்விகளை கடைசியில் எழுதலாம். கடினமான கணக்கு அல்லது கேள்வியை கடைசி வாய்ப்பாக வைத்துகொள்ளலாம். முக்கியமாக, கேட்கப்பட்ட விடையின் அளவுக்கேற்ப பதிலளித்தல் சிறப்பு. ‘பத்து வரிகளில் விடையளி’ என்றால் பத்து வரிகளில் மட்டுமே விடை எழுதினால், நேரம் மிச்சமாகும். முடிந்தவரை, தேர்வின் கடைசி பத்து நிமிடங்களை விடைகளை சரிபார்க்க வைத்துக் கொள்ளுங்கள்.

‘நமது நேரம் நம் கையிலே தான்; நமது நேரத்திற்கு நாம் தான் எஜமான்’ என்பதை உணர்ந்து, ஒவ்வொரு மணித்துளியையும் சரியாக திட்டமிட்டு பயன்படுத்துங்கள். சாதனைகள் சாதாரணமாகும்!

-எம். விக்னேஷ், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us