தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/விடுமுறையும், சோம்பலை விடும் முறையும்!

விடுமுறையும், சோம்பலை விடும் முறையும்!

விடுமுறையும், சோம்பலை விடும் முறையும்!


மே 11, 2016 12:00 AM

மே 11, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 11, 2016 12:00 AM மே 11, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உபரி நேரத்தை உரிய வழியில் செலவழிப்பவர்களை மிகப் பெரிய வெற்றியாளர்கள் என்று சொல்லலாம்!

பெரும்பாலும் ஆண்களோ, பெண்களோ வயதில் இளையவர் என்றால், வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டு ஓட்டுனர் உரிமம் பெறுவதைப் பார்க்கலாம். சற்று பருமனாக இருப்பவர்கள் உடற்பயிற்சி, நீச்சல், யோகா வகுப்புகளில் சேருகிறார்கள். இசை, நாட்டிய வகுப்புகளில் சேருபவரும், ஆங்கிலம் அல்லது பிற மொழிகள் கற்கும் வகுப்பில் சேருபவரும் இருக்கிறார்கள். நூலகங்களில் உறுப்பினராகி புதிய புத்தகங்கள் வாசிப்பவர்கள் இன்றும் குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள். அதிலும் தன்னம்பிக்கை சம்பந்தமான புத்தகங்கள் வாசிப்பவர்கள் உண்டு.

அதிகம் பேர் மிகவும் சீரியஸ் விஷயங்களை விரும்பாமல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாவல்கள், நகைச்சுவை நூல்கள் வாசிக்கிறார்கள். வெகு சிலர் சிறுவர்களுக்கு இலவச வகுப்பு எடுக்கிறார்கள், கோவில்களில் உழவாரப் பணியில் ஈடுபடுகிறார்கள், அநாதை இல்லங்களில் தன்னார்வத் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்கின்றனர். கடற்கரை மற்றும் பொது இடங்களில் சுத்தம் செய்யப் போகிறார்கள். விளையாட்டுப் பயிற்சி மற்றும் மேற்படிப்புக்கான பயிற்சியில் ஈடுபடுவதும் உண்டு.

மேலும் சிலர் விடுமுறை நாள் வேலைக்குப் போக விரும்பி உணவகங்களில், வங்கிகளில், சில்லறை விற்பனை நிலையங்களில், கணினி பயிற்றுவிக்கும் அமைப்புகளில் பகுதி நேர பணியில் இணைகிறார்கள். இது மிக நல்ல விஷயம்.

தனது பொழுதுபோக்குத் திறன் என்னவென்று அறிந்து படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், இசை பாடுதல், கவிதை, கட்டுரை எழுதுதல், புதுப்புது மொழிகள் கற்றல் என்று தன்னை மேம்படுத்தும் விஷயங்களில் ஈடுபடுகின்றனர். சிலர் தோட்டக் கலையில் மற்றும் கள ஆய்வு இவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இளம்பெண்கள் தையல், எம்ப்ரோய்டரி, மெஹெந்தி, அணிகலன் செய்தல் போன்ற பயிற்சிகளில் இணைகின்றனர்.

இப்போதைய நாட்டம் சமையல் செய்தல் என்பதால் ஆண், பெண் இருபாலருமே புதுப்புது சாப்பாடு விஷயங்கள் செய்யக் கற்கின்றனர். குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவு செய்ய உறவினர், நண்பர்கள் வீட்டிற்குப் போவோர், சொந்த ஊருக்குப் போவோரும் உண்டு.

ஆனால் மேற்சொன்ன எதுவுமே செய்ய விருப்பம் இல்லாமல் தாமதமாகத் தூங்கச் சென்று, தாமதமாக தூங்கி எழுந்து, நிறைய சாப்பிட்டு, அரட்டை அடித்து, டிவி பார்த்து, மீண்டும் தூங்கி, மொபைல் போனில் கதை பேசி, இலக்கு இல்லாமல் ஊர் சுற்றி, வம்பு வளர்த்து, வெயிலில் அலைவோரும் நிச்சயம் நிறைய உண்டு என்பதை மறுக்க முடியாது!

பலர் இன்று வலைத்தளத்தில் மூழ்கி இருப்பதே பெரிய குறையாகப் பேசப் படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், வீடியோ, திரைப்படம், விளையாட்டு விஷயங்கள் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பதைக் காண்கிறோம். முதியவர்கள், இளையவர்கள் என்ற பாகுபாடு இன்றி நிறைய பேர் ஒரே விஷயத்தில் அதிக நேரம் செலவு செய்பவர்களாகவும், வேண்டாத வேலைகளில் ஈடுபடுபவர்களாகவும் தான் இருக்கின்றனர்.

மகிழ்ச்சி மற்றும் மனதுக்கு இதம் தரும் நல்ல விஷயங்கள் செய்தல், குடும்ப உறுப்பினர்களோடு தரமான நேரம் செலவு செய்து நல்லுறவு வளர்த்தல்,  சமூக காரியங்களில் ஈடுபடுவது, பிறருக்கு பயன் தரும் செயல்களை செய்தல் மிக மிகப் பாராட்டுக்கு உரியது.

இப்போது யோசியுங்கள்! உங்கள் நேரம் எப்படிப் போகிறது என்று? படம் பார்ப்பதிலா, அரட்டை அடிப்பதிலா, இணைய தளத்திலா, நண்பர்களோடா, தூக்கத்திலா? உற்சாகமற்ற ஊக்கம் அளிக்காத எதையும் செய்பவர் நீங்கள் என்றால் நிச்சயம் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கும், வீட்டிற்கும், உலகிற்கும் உபயோகமானவராக இருக்க முடியமா என்று யோசியுங்கள்!

-முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us