தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/நீங்களும் யோகா பயிற்சியாளர் ஆகலாம்!

நீங்களும் யோகா பயிற்சியாளர் ஆகலாம்!

நீங்களும் யோகா பயிற்சியாளர் ஆகலாம்!


மே 12, 2016 12:00 AM

மே 12, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 12, 2016 12:00 AM மே 12, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்றைய உலகில், உடல் உபாதையிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபட்டு, துடிப்பான நபர்களாக இருக்க யாருக்குத்தான் விரும்பம் இருக்காது? இதற்கான ஒரு சிறந்த வழி தான், ‘யோகப் பயிற்சி’ என்பது இன்று உலகில் பெரும்பாலான மக்களால் உணரப்பட்டுள்ளது!

யோகாசனம் என்பது மிகப்பெரிய துறை என்றாலும், யாமா(அமைதியாவும், கட்டுப்பாடாகவும் நடத்தல்), நியாமா(5 சீரிய பண்புகள்) ஆசனா(அங்க அமைப்புகள்), பிராணயாமா(மூச்சுக் கட்டுப்பாடு), பிரத்யஹாரா(புலன்கள் கட்டுப்பாடு மற்றும் விடுபடுதல்), தரனா(ஒருமுகப்படுத்தல்), தியானா(தியானம்), சமாதி(அகந்தை அழிந்து சிறந்த உணர்வுநிலை ஏற்படுதல்) ஆகியவை இன்றைய நிலையில் யோகாவின் 8 பெரும் பிரிவுகளாகும்.

யோகா என்பது நமது உடலையும், மனதையும் சக்தியுடன் வைக்க பயன்படும் ஆற்றல் வாய்ந்த அம்சம் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். உலகெங்கிலும் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டுள்ள இந்நிலையில், யோகா பயிற்சியாளருக்கான தேவைகளையும், வாய்ப்புகளையும் அனைவரும் அறிவர்!

யோகா பயிற்சியாளர்
யோகா பயிற்சியை புதிதாக கற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு பயிற்சியளிப்பது இவரின் பணி. மனச்சோர்வு, அழுத்தம், மனநல கோளாறுகள் மற்றும் கவலை ஆகியவற்றிலிருந்து விடுபட, இவர் உதவுகிறார்.

தகுதிகள்
நீங்கள் ஒரு வெற்றிகரமான யோகா பயிற்சியாளராக இருக்க வேண்டுமெனில், உங்களுக்கு யோகாவின் மேல் காதல் இருக்க வேண்டும். யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்பவராகவும், அதைப்பற்றி அடிக்கடி படிப்பவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் நலம் உள்ளவராகவும், அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவராகவும், உங்களிடம் பயில வரும் நபர்களை ஊக்குவித்து, கவருபவராகவும் இருக்க வேண்டும்.

தொழில் வாய்ப்புகள்
இந்த பணியானது, ஒரு கவுரவம் வாய்ந்த, சவாலான, சிக்கல்களை கையாளக்கூடிய மற்றும் லாபகரமான ஒன்றாகும். ஒருவர், ஜிம், சுகாதார மையங்கள், சுற்றுலா மையங்கள், வாழுமிடங்கள் ஆகியவற்றில் யோகா பயிற்சியாளராக இருப்பதோடு அல்லாமல், யோகா தெரபிஸ்டாகவும் பணிபுரியலாம்.

வருமானம்
இத்துறையில் நல்ல ஆர்வம் உள்ள நபர்கள் சுயமாகவும், பலருக்கும் வகுப்புகள் எடுக்கலாம். ஒரு ஆரம்ப நிலை யோகா பயிற்சியாளர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், அனுபவம் உள்ளவர் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும் ஊதியமாக பெறுவார். சுயமாக பயிற்சியளிப்பவரவது வருமானத்திற்கு வரையறை இல்லை.

எங்கே பயிற்சி பெறலாம்?
கடந்த சில வருடங்களாக, யோகா ஒரு பிரபலமான தொழிலாக இந்தியாவில் வளர்ச்சியடைந்து வருவதால், பலவிதமான கல்வி நிறுவனங்கள் யோகா பயிற்சி சம்பந்தமான படிப்புகளை வழங்குகின்றன. அவற்றுள், தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மங்களூர் பல்கலைக்கழகம், குஜராத் ஆயுர்வேதா பல்கலை, அம்பேத்கர் பல்கலை(உ.பி), யோக வித்யா குருகுலம்(மராட்டியம்) போன்றவை முக்கியமானவை. மேலும், பல்வேறு தனியார் அமைப்புகளும், ஆன்மிக மையங்களும் சிறந்த யோக பயிற்சியை அளிக்கின்றன.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us