தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிரிட்டன்-காமன்வெல்த் உதவித்தொகை

பிரிட்டன்-காமன்வெல்த் உதவித்தொகை

பிரிட்டன்-காமன்வெல்த் உதவித்தொகை


மே 20, 2016 12:00 AM

மே 20, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 20, 2016 12:00 AM மே 20, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டுக்கு, சுமார் 900 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது, யு.கே., காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன் (சி.எஸ்.சி.,).

அதிலும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காமன்வெல்த் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பல்வேறு உயர்கல்வி உதவித்தொகையை பிரிட்டன் வழங்கி வருகிறது.

முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகளுக்கான உதவித்தொகை
பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் முழு நேரக் கல்வி முறையில் மூன்று ஆண்டுகள் கொண்ட ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.,) மற்றும் ஒர் ஆண்டு கொண்ட முதுநிலை பட்டப்படிப்புக்கு, இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்
பிஎச்.டி.,படிப்புக்கு, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது, இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புக்கு, இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஐ.இ.எல்.டி.எஸ்., எனும் மொழிப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் அவசியம்.

உதவித்தொகை
கல்விக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், தங்கும் கட்டணம், உணவுக் கட்டணம் போன்றவை வழங்கப்படும். மேலும், மாணவரின் படிப்பு காலம் 18 மாதத்திற்கு மேல் தொடரும் நிலையில், அவர் திருமணம் ஆனவர் என்றால், குடும்பத்தினரோடு பிரிட்டனில் தங்கியிருக்கும் சூழலில்,அவர்களது குடும்பத்தினருக்கான செலவும் உதவித்தொகையில் சேர்த்து வழங்கப்படும்.

குறிப்பு: மேலாண்மை (எம்.பி.ஏ.,) பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க இயலாது.

* ஸ்பிலிட்- சைட் பிஎச்.டி., உதவித்தொகை
மாணவர்கள், தேர்வு செய்யப்பட்ட பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டப்படிப்பை 12 மாதங்களுக்கு படிக்க வேண்டும், பின்பாதியை தங்களது சொந்த நாட்டில் தொடரலாம்.

தகுதிகள்: இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., படிப்புக்கு பதிவு செய்திருத்தல் வேண்டும். ‘ஐ.இ.எல்.டி.எஸ்.,’ மொழிப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

உதவித்தொகை: போக்குவரத்துக் கட்டணம், தங்கும் கட்டணம் மற்றும் கல்வி மற்றும் தேர்வு கட்டணம்.

* ஷேர்டு ஸ்காலர்ஷிப்
முதுநிலை பட்டப்படிப்பை பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் தொடர முடியாத, குடும்ப வருமானத்தில் பின்தங்கிய மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ்.,’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

உதவித்தொகை: போக்குவரத்து கட்டணம், தேர்வு கட்டணம், தங்கும் கட்டணம் மற்றும் படிப்பு ஆய்வுக்கான போக்குவரத்து கட்டணம்.

* தொலைநிலைக் கல்வி உதவி தொகை
இந்த திட்டத்தில், கல்வியில் சிறந்த ஆசிய மாணவர்களுக்கு, தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கப்படும் பின்வரும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு கல்விக்கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் - எம்.எஸ்சி., டிமென்ஷியா ஸ்டடிஸ்
கார்டிப் பல்கலைக்கழகம்- எம்.எஸ்சி., வலிநிவாரண மருத்துவம் மற்றும் பராமரிப்பு
ராயல் கால்நடை மருத்துவக் கல்லூரி- எம்.எஸ்சி., கால்நடை தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரம்.

மேலும் விவரங்களுக்கு: http://cscuk.dfid.gov.uk/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us