தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஆராய்ச்சியின்றி எதிர்காலம் இல்லை!

ஆராய்ச்சியின்றி எதிர்காலம் இல்லை!

ஆராய்ச்சியின்றி எதிர்காலம் இல்லை!


மே 14, 2016 12:00 AM

மே 14, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 14, 2016 12:00 AM மே 14, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்து ஆண்டுகளுக்கு முந்தையதைப் போல் அல்ல, தற்போதைய மாணவர்களின் கற்கும் முறை. இன்றைய மாணவர்களிடம் ‘சுயகற்றல் திறன்’ வெகுவாக அதிகரித்து வருகிறது!

மாற்றம்
முன்பு செல்போன் பயன்படுத்துவது என்பது அரிது. ‘செல்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை’ என்று சொல்லும் அளவிலான வளர்ச்சியை நாம் இப்போது அடைந்துவிட்டோம். இத்தகைய பிரம்மாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சியால், ‘மொபைல் ஆப்’ மற்றும் ‘ஆன்லைன்’ வழியாக மாணவர்கள் அதிவேகமாக கற்கின்றனர். அதேசமயம், தொழில்நுட்பத்தை சரியாகவும், முறையாகவும் கையாளும் திறனை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டியது அவசியம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

முன்புபோல் வகுப்பறை கல்வியில் இருந்த ஆற்றல் தற்போது இல்லை. மிகவும் உயிரோட்டமான கற்பிக்கும் முறையைத்தான், இன்று மாணவர்கள் வகுப்பறையில் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு தேவை அறிவுரைகள் அல்ல; உத்வேகமும், வழிகாட்டுதலுமே. மாணவர்களின் இந்த மாற்றத்திற்கு ஏற்ப கல்லூரியும் மாற வேண்டியுள்ளது!

பொறியியல் படிப்பு படிக்க, எந்த மாணவருக்கும் அடிப்படை ‘ஆப்டிடியூட்’ நிச்சயம் தேவை. பள்ளியில் பின்பற்றியதைப்போல, பட்டப்படிப்பிலும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதிவிடலாம். ஆனால், படித்ததை பணியில் செயல்படுத்தும்போது, குட்டு வெளிப்பட்டு விடும்.

அகடமிக் 50 சதவீதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு 50 சதவீதம் என இருந்தால் மட்டுமே கல்லூரிகளுக்கும் சரி, மாணவர்களுக்கும் சரி இனி எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். ஒரு லட்சம் பேர் பொறியியல் படிக்கலாம்; ஆனால், அவர்களில் தனித்து நிற்பது யார் என்றால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டவர்கள் தான்!

கூடுதல் பயிற்சி
பாடத்திற்கும் அப்பாற்பட்டு என்ன செய்கிறார்கள் என்பதே, எந்த ஒரு கல்லூரியையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை உணர்ந்தே, எங்கள் கல்லூரியில், ‘ஆப்டிடியூட்’ , ‘க்வான்டிடேடிவ் அனாலைசிஸ்’ , ‘பிரிட்டீஷ் இங்கிலிஷ்’ போன்ற பயிற்சி பல்வேறு கூடுதல் பயிற்சிகளை, மாணவர்களுக்கு வழங்குகிறோம். இவையெல்லாம், பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இல்லை. மேலும், சி.வி.சி., ஆட்டோமேஷன், சி.சி.என்.ஏ., மைக்ரோசாப்ட், ஆரக்கிள் போன்ற மதிப்பு கூட்டு பயிற்சிகளையும் அளிக்கிறோம். இதைத்தான் இன்றைய மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்!

வேலைவாய்ப்பிற்கான வளாக நேர்காணலில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்கள் பார்வையில், இதுபோன்ற கூடுதல் பயிற்சி பெற்ற மாணவர்கள் தனித்து தெரிகின்றனர். பி.இ., படித்த முடித்தவுடன் மாணவர்கள் ஒன்று வேலை பெற்றிருக்கவேண்டும்; இல்லை தொழில்முனைவோராக வேண்டும் அல்லது மேற்படிப்பு படிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும், இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கல்லூரியை விட்டு வெளியே செல்லும் அளவிற்குத்தான் எங்களது பயிற்சி அமைந்துள்ளது!

-பி.வெங்கடேஷ் ராஜா, இயக்குனர், எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us