தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மனதிற்கு ஊக்கம்தான் உரம்!

மனதிற்கு ஊக்கம்தான் உரம்!

மனதிற்கு ஊக்கம்தான் உரம்!


மே 28, 2016 12:00 AM

மே 28, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 28, 2016 12:00 AM மே 28, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊக்கம் என்பது என்ன? செய்யும் காரியத்தை முன்பைவிட அழகாக, சரியாக, இலகுவாகச் செய்ய நம்மைச் செம்மைப்படுத்தி, உத்வேகப்படுத்துவதே!

ஊக்கப்படுத்துதல் என்பது அகஊக்கம், புறஊக்கம் என இருவகைப்படும். அதாவது, நாம் சிறப்பாகச்செய்து முடித்த ஒரு பணிக்காக சான்றிதழ், பட்டயம் அல்லது விருது பெறுதல் புற ஊக்கமாகும். மற்றபடி, நமது செயல்பாடு பிறரால், சுற்றி இருப்பவரால் பாராட்டப்படும் போது நம் மனதில் திருப்தி ஏற்பட்டு அகஊக்கம் பெருக்கெடுக்கிறது! இப்படிப்பட்ட அக ஊக்கம்தான் விரும்பத்தக்கது. அவை, மேலும் சிறந்த பணிகளைச் செய்யத் தூண்டுகிறது.

கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திற்கு, ஊக்கம் ஒரு கருவியாக அமைகிறது. அது உணர்வுபூர்வமானது, விஷயபூர்வமானது அல்ல!

எப்படி நம்மையும், பிறரையும் ஊக்கப்படுத்திக்கொள்ளலாம்?

- சூழ்நிலையை சுமுகமானதாக வைத்துக்கொள்ளுதல்
- சிறுசெயல்களைக் கூட மனம் திறந்து தாராளமாகப் பாராட்டுதல்
- எடுத்த பணியை ‘முடியாது’ என்று நிறுத்திவிடாமல், விடாமுயற்சியுடன் செயலாக்குதல்
- தொடர்ந்து கற்றுக்கொள்ள/ தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டல்
- சாதக, பாதகங்களை ஏற்றுக்கொள்ளுதல் மிக முக்கியம்
- ஒவ்வொரு தனி மனிதரையும் வெவ்வேறு விஷயங்கள் ஊக்கப்படுத்துகின்றன. அவற்றைக் கண்டறிந்து அவரவர்க்கேற்ப அதைப் பயன்படுத்துதல் கூடுதல் பலன்தரும்.

ஊக்கப்படுத்தாத, பாராட்டப்படாத மனிதர்கள் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார்கள். அதிக கவனம் செலுத்த முடியாதவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைபவர்கள் போன்றவர்களை இன்றைய காலகாட்டத்தில் அதிகம் பார்க்கலாம்.

இவர்களுக்கு வெறுப்பு, ஞாபகமறதி, கைநடுங்குதல், உயர் ரத்த அழுத்தம், பசியின்மை, கவனக்குறைவு, மார்பு பகுதியில் சங்கடம், சோர்வு, தூக்கமின்மை, மூச்சுவிட சிரமம் எல்லாம் ஏற்படுகின்றன. ஊக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு இந்த பிரச்னைகள் வருவதில்லை.

இன்று மிகப்பெரிய நோய் தொழுநோயோ, காசநோயோ அல்ல. ஆனால் ‘நான் ஒரு தேவையற்றவர்’ என்ற உணர்வே ஆகும் என்கிறார், அன்னைதெராசா.

தாமஸ் ஹிட்காக், ‘தோல்வி வந்தால் அது உனக்கு பிரியமானது போல் காட்டிக்கொள். வெற்றியடைந்தால் மிகவும் பழக்கப்பட்டது போல் காட்டிக்கொள்’ என்கிறார்.

இந்த வரிகளில் தான் எத்தனை உண்மைகள்!

- முனைவர் பாலசாண்டில்யன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us