தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தொடர் வளர்ச்சிக்கு சமநிலைக் கல்வி அவசியம்!

தொடர் வளர்ச்சிக்கு சமநிலைக் கல்வி அவசியம்!

தொடர் வளர்ச்சிக்கு சமநிலைக் கல்வி அவசியம்!


மே 30, 2016 12:00 AM

மே 30, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 30, 2016 12:00 AM மே 30, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் தான் அதிகம். தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி இல்லையென்றால், இன்று இவ்வளவு இன்ஜினியர்ளையோ, பட்டதாரிகளையோ பார்த்திருக்க முடியாது!

தமிழகத்தில், தனியார் கல்வி நிறுவனங்கள் 1980 முதல் அதிகளவில் உருவாகத் தொடங்கின. இந்த வளர்ச்சியால் தான், ஐ.டி., நிறுவனங்களும் அதிகளவில் தென் மாநிலங்களில் கால் பதித்திருக்கிறது என்று கருதுகிறேன். ஏனெனில், ஐ.டி., நிறுவனங்கள் தங்களது பணிகளுக்கு பெரும்பாலும் திறமையான பணியாளர்களையே நம்பி உள்ளன. அதனால்தான், அந்நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் பெரும் பங்கை மனித ஆற்றல்களுக்காக செலவிடுகின்றன.

அத்தகைய முக்கியத்துவம் பெற்ற மனித ஆற்றல், திறம்பட செயலாற்றும் தகுதிபடைத்த, சிறந்த பணியாளர்கள் தென் மாநிலங்களில் அதிகளவில் உருவாவதற்கு முக்கிய காரணமே தனியார் கல்வி நிறுவனங்கள் தான்!

இதுவரை, ஐ.டி., நிறுவனங்களின் வளர்ச்சி அதிக வேலை வாய்ப்பை அளித்து வந்தாலும், தற்போது, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால், உற்பத்தி துறையில் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நிலைக்கு உயர்ந்து வருகிறோம். இந்த உயர்வு தற்போதைய தேவையும் கூட! இவ்வாறு, பலதரப்பட்ட திறன்கள் கொண்ட மனித ஆற்றலை உருவாக்கும் பொறுப்பும் இன்றைய கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.

கல்வி என்பது ஒரு தொடர் வளர்ச்சியை குறிக்கிறது. வளர்ச்சியை அளவிடவும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. பிரிட்டன் போன்ற நாடுகளில், 400 ஆண்டுகள், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வி நிறுவனங்களை எளிதில் பார்க்க முடியும். இந்தியாவிற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் என்பது மிகப்புதியது. ஒரு நூறு ஆண்டுகளுக்குபிறகு தான், நமது நாட்டின் வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பை சரியாக உணர முடியும்!

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும், இரண்டு விதமான கல்வி முறை பின்பற்றப்படுகிறது. ஒன்று கற்பித்தல்-கற்றல் முறை; இரண்டாவது, மேற்கத்திய நாடுகளில் காணப்படுவதைப்போன்று, 25 சதவீதம் மட்டுமே கற்பித்தல்-கற்றல்; மீதம் முற்றிலும் அனுபவக் கற்றல். இந்தியாவின் எதிர்பார்ப்பிற்கு, முற்றிலும் மேற்கத்திய முறையை நம்மால் பின்பற்ற முடியாது. எனவே, இரண்டு முறையையும் சமநிலையோடு பின்பற்றும் ஒரு நிலை தான் நமக்கு தேவை!

ஏனெனில், ‘கற்பித்தல்-கற்றல்’ என்ற முறை மட்டுமே நமக்கு சரியானதாக அமையாது. பட்டம் பெற்ற முதல் 5 ஆண்டுகள் வரை வேண்டுமானால் அத்தகைய முறை நமக்கு உதவலாம். ஆனால், வாழ்க்கை என்பது முதல் பணி வாய்ப்பு மட்டுமில்லையே! அடுத்த 40 ஆண்டுகளுக்கு புதியவைகளை புரிந்துகொள்ளல், ஏற்றுக்கொள்ளுதல்,  திறம்பட செயலாற்றுதுதல், வளர்ச்சியடைதல் ஆகியவை தானே? அத்தகைய சமநிலைக் கல்வி முறையைத்தான் நாங்கள் எங்களது மாணவர்களுக்கு வழங்குகிறோம்!

-எம்.அபய் சங்கர், துணைத் தலைவர், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us