sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மீன்வளத் துறையில் ஆர்வமா?

/

மீன்வளத் துறையில் ஆர்வமா?

மீன்வளத் துறையில் ஆர்வமா?

மீன்வளத் துறையில் ஆர்வமா?


ஜூன் 06, 2016 12:00 AM

ஜூன் 06, 2016 12:00 AM

Google News

ஜூன் 06, 2016 12:00 AM ஜூன் 06, 2016 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் கோடிக்கணக்கான மக்கள் உண்ணும் புரத சத்துள்ள முக்கிய அசைவ உணவு மீன்! எனவே, மீன் வளத்தை பெருக்குவதற்கான தேவை அதிகம்!

மீன் வளத்தை மேம்படுத்த, செயல் திறன் மிக்க பணிக்குழு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்துறை பணிகளுக்கு துறைசார்ந்த அறிவும், தொழில்நுட்ப திறனும் உள்ள நபர்கள், ஆலோசகர்கள், மீன்வள மேம்பாட்டு திட்ட இயக்குனர்கள் உட்பட பலர் தேவைப்படுகிறார்கள்.

கல்வித் தகுதிகள்
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை எடுத்து படித்தவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் பி.எப்.எஸ்சி., படிக்க வேண்டும். மாநில விவசாய அல்லது கால்நடை அறிவியல் பல்கலைக்கழகங்களில் ‘மெரிட்’ அடிப்படையில் இப்படிப்பில் சேரலாம். பிற மாநில மாணவர்களுக்கு, ஐ.சி.ஏ.ஆர்., (இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்) நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் இடம் கிடைக்கும்.

இளநிலை பட்டப் படிப்பை முடித்தபிறகு, மேற்படிப்பை தொடரலாம். மேற்படிப்புகளுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் இடம்பெற, ஐ.சி.ஏ.ஆர்., நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வை எழுத வேண்டும்.

தேவைப்படும் பண்புகள்
கடல்சார் உலகைப் பற்றிய ஆர்வமும், அறிவும் இருக்க வேண்டும். கிரகிக்கும் தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டும். மேலும், கடினமாக உழைப்பதற்கு உரிய பக்குவமும், பொறுப்புணர்வும், தன் பணியின் மீதான காதலும் இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்புகள்
பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையையும், பல துறைமுகங்களையும், ஏராளமான ஆறுகளையும் நம் நாடு கொண்டிருப்பதால் மீன்சார் தொழிலில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் துறைகளில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. கள அதிகாரிகள் மற்றும் மேலாளர்கள், மாநில அரசு துறைகளில் மீன்வள உதவி மேம்பாட்டு அதிகாரி, மீன்வள எக்ஸ்டென்சன் அதிகாரி போன்ற பணி நிலைகள் உள்ளன.

கடல்சார் உற்பத்தி ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(எம்.பி.இ.டி.ஏ.,), இந்திய மீன்வள சர்வே(எப்.எஸ்.ஐ.,), உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.,) போன்ற நிறுவனங்களில் அதிக பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் சுய தொழிலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. மீன் உணவு தயாரிப்பு, மீன் உணவு விற்பனை, மீன் பதப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற தொழில்களை சுயமாகவே மேற்கொள்ளலாம். இத்துறையில் வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

முக்கிய கல்வி நிறுவனங்கள்:
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை
ஆந்திரா பல்கலைக்கழகம்
மத்திய மீன்வள கல்வி நிறுவனம், மும்பை
மத்திய மீன்வள கல்வி நிறுவனம், கொச்சி
மீன்வள கல்லூரி, மங்களூர்
கோவா பல்கலைக்கழகம்,
இந்திராகாந்தி வேளாண்மை பல்கலைக்கழகம், ராய்பூர்






      Dinamalar
      Follow us