/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., படிக்கலாமா?
/
ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ்., படிக்கலாமா?
ஜூன் 08, 2016 12:00 AM
ஜூன் 08, 2016 12:00 AM
ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது!
இதற்கு ரஷ்ய கல்வி நிறுவனங்கள், சாரசரியாக ஆண்டுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 3.4 லட்சம் ரூபாய்) கல்விக்கட்டணம் பெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
‘ஸ்கீரினிங் டெஸ்ட்’:
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை நிறைவு செய்யும் இந்திய மாணவர்கள், இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா (எம்.சி.ஐ.,) நடத்து ஸ்கீரினிங் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். சில முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் 70 சதவீதம் பேர் முதல் முறையிலேயே இத்தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.
இந்தியாவில் பயிற்சி
பொதுவாக இந்தியாவில் காணப்படும் நோய்களுக்கு, உரிய மருத்துவ பயிற்சியை அங்கேயே பெறுவது தான் உகந்தது. எனவே, மாணவர்கள் தங்களது படிப்பு காலத்திலேயே நேரடியாக இந்தியாவிலேயே பயிற்சி பெற அனுமதிக்கும் கல்விநிறுவனங்களில் சேர்வது நல்லது.
பிரச்சனை எங்கே?
சமூக பிரச்சனைகள், பாதுகாப்பின்மை, உணவு, சீதோஷ்ன நிலை போன்ற காரணங்களுக்காக ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் யாரும் தங்களது படிப்பை பாதியில் விடுவதில்லை. எனினும், 20 சதவீத இந்திய மாணவர்களால் தங்களது மருத்துவக் கல்வியை நிறைவு செய்யமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்புகளுக்கு சரியாக செல்லாதது, பாடங்களை முறையாக படிக்காதது, பயிற்சிகளை சரியான நேரத்தில் நிறைவு செய்யாதது போன்றவையே அதற்கு முக்கிய காரணங்கள். தங்களது கல்வியில் போதிய ஆர்வம் செலுத்த வேண்டியது மாணவர்களின் கடமை. பெற்றோர்களும், அவர்களை முறையாக கண்காணிக்க வேண்டியது அவசியம். போதிய செலவு செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதோடு பெற்றோரது கடமை முடிந்து விடாது; அதன்பிறகு தான் அவர்களது கடமை அதிகரிக்கிறது என்பதை உணர வேண்டும்!
-அலெக்ஸி எஸ்.சோசிநவ், வேந்தர், கசான் மருத்துவ பல்கலை, ரஷ்யா.

