தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இங்கிலாந்தில் படிக்க உதவித்தொகை!

இங்கிலாந்தில் படிக்க உதவித்தொகை!

இங்கிலாந்தில் படிக்க உதவித்தொகை!


ஜூலை 01, 2016 12:00 AM

ஜூலை 01, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 01, 2016 12:00 AM ஜூலை 01, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வியில் சிறந்த மாணவர்கள், இங்கிலாந்தில் உயர்கல்வி மேற்கொள்ள வழிகாட்டுகிறது ‘சேவெனிங்’ உதவித்தொகை!

பொருளாதார சூழ்நிலையால், சிறந்த மாணவர்கள் உயர்கல்வியை கைவிடக்கூடாது என்பதற்காக, எப்.சி.ஓ., எனப்படும் இங்கிலாந்து அரசின், வெளிநாடு மற்றும் காமன்வெல்த் அலுவலகம், பிற அமைப்புகளுடன் இணைந்து, இரண்டு வகையான உதவித்தொகையை வழங்குகிறது.

சேவெனிங் ஸ்காலர்ஷிப்: இங்கிலாந்தில் செயல்படும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புக்கு, இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

துறைகள்: ஆற்றல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், நகர்ப்புற வளர்ச்சி, ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, வர்த்தகம் மற்றும் முதலீடு, பொருளாதார சீர்திருத்தம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு போன்ற ஏதனும் ஒரு துறையை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சேவெனிங் பெலோஷிப்: குறுகிய கால படிப்புகள் மற்றும் துறை சார்ந்த தனித்திறன்களை வளர்த்து கொள்வதற்கு, இத்திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் செயல்படும் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.

பிரிவுகள்: சேவெனிங் பிரிட்டிஷ் லைப்ரரி பெல்லோஷிப், சேவெனிங் குருகுல் பெல்லோஷிப் புரோக்கிராம் பார் லீடர்ஷிப் அண்ட் எக்சலன்ஸ், சேவெனிங் ரோல்ஸ்-ராய்ஸ் சயின்ஸ் அண்ட் இனோவேஷன் லீடர்ஷிப் பெல்லோஷிப், சேவெனிங் டிசிஎஸ் சைபர் செக்கியூரிட்டி பெல்லோஷிப் (சைபர்), 5. சேவெனிங் க்லோர் பெல்லோஷிப் (கலை மற்றும் கலாசாரம்), சவூத் ஏசியா ஜெர்னலிசம் புரோக்கிராம்.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் இளநிலை அல்லது முதுநிலை பட்டத்துடன், ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது டோபல் மொழிப் புலமை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: www.chevening.org

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us