ஜூலை 06, 2016 12:00 AM
ஜூலை 06, 2016 12:00 AM
இன்றைய மாணவர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய துறைகளில் ‘பயோ இன்பர்மேடிக்ஸ்’ துறையும் ஒன்று!
உயிரியல் மற்றும் கணினி அறிவியல் துறைகள் இணைந்ததே ‘பயோஇன்பர்மேடிக்ஸ்’ என்றாலும், புள்ளியியல், கணிதம் மற்றும் பொறியியல் ஆகியவற்றுன் பங்களிப்பும் இத்துறையில் அதிகம்.
பயாலஜிகல் டேட்டா தொடர்பான பலவித பணிகளுடன் சம்பந்தப்பட்டுள்ள இத்துறை, புற்றுநோய், நீரழிவு, ஞாபக மறதி மற்றும் குழந்தையின்மை ஆகிய நோய்களின் ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. டேட்டா அனலிசிஸ் டூல்ஸ் மேம்பாடு, பயாலஜிகல் மேக்ரோ மாலிகியூல்ஸ் மாடலிங், மெடபாலிக் பாத்வேய்ஸ், டிசைனிங் ஆப் நியூ மாலிகியூல்ஸ், பெப்டைட் வேசின்ஸ், புரோடின்ஸ் உள்ளிட்டவையும் இத்துறையில் அடங்கும்.
தேவைப்படும் திறன்கள்
உயிரியலில் அதீத ஆர்வம், கணினி மென்பொருள் துறையில் நல்ல அறிவு, நிர்வாக திறன்கள், தர்க்கரீதியான மற்றும் பகுப்பாய்வு திறன்கள்.
வேலை வாய்ப்புகள்
இத்துறை நிபுணர்கள், பார்மசூடிகல் மற்றும் பயோடெக் கம்பெனிகள், முன்னணி அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற பல இடங்களில் பணி வாய்ப்புகளை பெறலாம்.
சம்பள விவரம்
அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிந்தால், உங்களின் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளமாக பெறலாம். அதேசமயம், தனியார் பார்மசூடிகல் கம்பெனிகள் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை ஊதியம் பெறலாம்.
படிப்புகள்
பயோஇன்பர்மேடிக்ஸ், பி.எஸ்சி., பி.டெக்., மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகளாக சில கல்விநிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2வில் பயாலஜி படித்தவர்கள் பெரும்பாலும் இப்படிப்புகளுக்கு சிறப்பு தகுதி பெற்றவர்கள் என்றாலும், பயாலஜி அல்லாத பிற அறிவியல் பாடப்பிரிவு படித்தவர்களும் இப்படிப்புகளில் சேரமுடியும்.
பயாலஜி பிரிவில் பி.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், எம்.எஸ்சி. பயோஇன்பர்மேடிக்ஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஏற்கனவே பயாலஜி பாடத்தில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர்கள், பயோஇன்பர்மேடிக்ஸ் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
* அமிட்டி பல்கலைக்கழகம், நொய்டா
* பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
* பயோஇன்பர்மேட்டிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, நொய்டா
* சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை
* வி.ஐ.டி. பல்கலைக்கழகம், வேலூர்
* ஜெய்புரியா இன்ஸ்டிடியூட், காசியாபாத்
* புனே பல்கலைக்கழகம், புனே

