sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

மனம் எனும் பொறி!

/

மனம் எனும் பொறி!

மனம் எனும் பொறி!

மனம் எனும் பொறி!


ஜூலை 08, 2016 12:00 AM

ஜூலை 08, 2016 12:00 AM

Google News

ஜூலை 08, 2016 12:00 AM ஜூலை 08, 2016 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில நேரங்களில் ஆதரவற்ற அல்லது நிச்சயமற்ற ஒரு சூழலில் நாம் சிக்கித் தவிக்க நேரிடும். அது ஓர் இருட்டு அறையாகவோ, நின்று போன மின் தூக்கியாகவோ இருக்கக் கூடும்!

அவசர நேரத்தில் மொபைல் போன் தொலைந்து போனால், பிடித்த கல்லூரியில் பிடித்த படிப்பில் இடம் இல்லையெனில், திடீரென வேலை பரிபோனால் போன்றவை நவீன உதாரணங்கள். அப்போது மனதில் படபடப்பு, பாதுகாப்பின்மை, பயம், தவிப்பு எல்லாமே கலந்து உண்டாகும்!

எதிர்பாராத சூழல் ஏற்கனவே இருக்கும் நமது சுய சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இருக்கும். இதற்குப் பெயர் தான் ‘மனப்பொறி’ எனப்படும் ‘மைண்ட் ட்ராப்’! அத்தருணத்தில் நாம் சிக்கித் தவிப்பது பொறியில் மாட்டிக் கொண்ட எலி போலத்தான். எதிர்மறை சுயபேச்சு, எரிச்சல், வெறுமை, மந்தமான நிலை, அமைதியில்லா நிலை, குற்றம் சாட்டும் மனநிலை என எதுவும் நடக்கலாம்.

வாழ்வின் இந்த தடைகள் நம்மை மன அழுத்தத்தில் கொண்டு தள்ளி, அதனால் எதிர்மறை எண்ணங்கள் ஆட்டிபடைக்க, நாம் பேரழிவை நோக்கி செல்லுவது போல உணரத் தொடங்குவோம். சங்கிலியில் கட்டப்பட்ட நாய் போன்று நமது மனமும் சிறைப்படும்.

அப்போது தப்பிக்க வழி என்ன என்று பார்க்க, மாற்ற முடிந்தவற்றை மாற்ற, மாற்ற முடியாதவற்றை ஏற்க, ஏற்க முடியாத ஒன்றிலிருந்து நம்மை விலக்கி வைக்க என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். நமது உறுதியான முடிவுகளை பயன்படுத்த வேண்டும். மாறாக நமது வழக்கமான முடிவுகளுக்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது!

ஒருவரை வைத்து கதவு மூடப்பட்டால் அது சிறை. நாமே உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டால் அது அறை! இல்லாத கதவைத் திற என்று கத்துவதும், திறந்திருக்கும் கதவை மோதிப் பார்ப்பதும் நமது மனப்பொறியின் கோளாறு தான்.

யூகம், தவறான நம்பிக்கை, தேவையற்ற ஒப்பீடுகள், அனாவசிய எதிர்பார்ப்புகள் இவை எல்லாமே நம்பிக்கையோடு சரியாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளாத வரை நம்மை அவை சிக்கலில் மாட்டி விடும் என்பது தான் இங்கு முக்கிய செய்தி!

மனப்பொறி சிக்கலுக்கு விடுதலை தருவது, பொதுஅறிவு, உள்ளுணர்வு, சமயோஜித அறிவு இவை தான் என்றாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வருவது போல, சிக்கல் என்றதும் நண்பரை தொடர்பு கொள்ளுதல், நிபுணரின் உதவி என்று கூட இருக்கலாம்!

-முனைவர் பாலசாண்டில்யன்






      Dinamalar
      Follow us