sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

அடுத்த இலக்கு?

/

அடுத்த இலக்கு?

அடுத்த இலக்கு?

அடுத்த இலக்கு?


ஜூலை 12, 2016 12:00 AM

ஜூலை 12, 2016 12:00 AM

Google News

ஜூலை 12, 2016 12:00 AM ஜூலை 12, 2016 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மத்தியில் நிலவும் அடுத்த கேள்வி, வாழ்க்கையில் தங்களின் அடுத்த இலக்கு என்ன என்பது தான்?

மேற்படிப்பில் என்ன படிப்பை தேர்ந்தெடுக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதற்கு சில டிப்ஸ்:

* மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளை கடந்து, ஏராளமான படிப்புகள் உள்ளன என்பதை உணருங்கள். அனைத்து துறை படிப்பும் சிறந்தவையே. அதில் நாம் காட்டும் ஆர்வமும், எடுத்துக் கொள்ளும் முயற்சியே நம்மை உயர வைக்கும்!

* இன்று பிரபலமாக இருக்கும் ஒரு துறை, சில ஆண்டுகளில் மாற்றம் காணலாம். அதனால், இன்றைய நடைமுறையை பார்க்காமல், சற்றே தொலைநோக்கில் யோசிக்கலாம்.

* உங்கள் நண்பர், வகுப்புத் தோழர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் உறவினர் தேர்ந்தெடுத்த படிப்பு என்று நீங்களும் அதை கண் மூடித் தனமாக தேர்வு செய்யவேண்டாம். உங்களுக்கு எதில் விருப்பமோ அதை தேர்வு செய்யவும்.

* நீங்கள் விரும்பும் பாடம் உள்ளூர் கல்லூரிகளில் இல்லையென்றால் வெளியூர் செல்ல தயங்க வேண்டாம். கிணற்று தவளையாக இருப்பதில் பயன் இல்லை.

* நீங்கள் விரும்பும் கல்வியை கற்க போதிய வசதி இல்லையென்றால் அதை  நிவர்த்தி செய்ய தற்போது கல்விக்கடன், உதவித்தொகை வசதிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஒரே கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யாமல், பல கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்து வைப்பது பாதுகாப்பு. ஒரு கல்லூரியில் சேரும் முன் அங்கு படிப்பதற்கு ஏற்ற சூழல், ஆசிரியர்களின் தரம், நூலகம், ஆய்வகம், விடுதி வசதி போன்றவற்றை முதலில் பார்க்க வேண்டும். கல்லூரிகளின் போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்.

* பலரிடமும் யோசனை கேட்டாலும், முடிவு உங்களுடையதாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருப்பது தான் சிறப்பு.

* இறுதியாக ஒன்று. காலம் இன்னும் கடக்கவில்லை. இதுவரை எந்த பாடத்திலும் பிடிப்பு இல்லையென்றாலும், இப்பொழுதாவது ஒரு விருப்பபாடத்தை ஏற்றுக் கொண்டு பிறகு அந்த துறையில் சேருங்கள்!

-எம்.விக்னேஷ், மதுரை.






      Dinamalar
      Follow us