sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

கட்டுரைகள்

/

நீங்களும் ஆகலாம் கார்ட்டூனிஸ்ட்!

/

நீங்களும் ஆகலாம் கார்ட்டூனிஸ்ட்!

நீங்களும் ஆகலாம் கார்ட்டூனிஸ்ட்!

நீங்களும் ஆகலாம் கார்ட்டூனிஸ்ட்!


ஜூலை 19, 2016 12:00 AM

ஜூலை 19, 2016 12:00 AM

Google News

ஜூலை 19, 2016 12:00 AM ஜூலை 19, 2016 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் உளவியல் ரீதியாக மாற்ற கூடிய வல்லமை ஊடகங்களுக்கு உண்டு. இத்தகையை துறையில் மிளிர அரசியல் அறிவையும், ஓவியத் திறனையும் ஒருங்கிணைத்து வளர்த்து கொண்டால் நீங்களும் ‘கார்ட்டூனிஸ்ட்’ ஆகலாம்!

யார் கார்ட்டூனிஸ்ட்?
அரசியல் களத்தில் ஏற்படும் நிகழ்வுகள், பிரபலங்களின் விமர்சினம், சமூகத்தில் உள்ள பிரச்னைகள், மக்களின் தேவைகளை அரசிடம் தெரிவிப்பது, உள்ளிட்டவற்றை நையாண்டி ஓவியமாக மிக எளிய முறையில் ஊடகத்தின் வாயிலாக, நகைச்சுவையாக காட்டுபவர் ‘கார்ட்டூனிஸ்ட்’

பத்திரிக்கைகள் மட்டுமல்லாமல், படங்கள் வாயிலாக கதை கூறும் சிறுவர் புத்தகங்கள் (காமிக் புக்ஸ்), கற்பனையான நிகழ்ச்சிகளையும் மனிதர்களையும் சுவாரஸ்யமாக விவரிப்பவரும் ‘கார்ட்டூனிஸ்ட்’. இவர் கதாசிரியர்களுடன் இணைந்தே பணியாற்றுகிறார்.

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய, அனிமேஷன் படங்களில், வெவ்வேறு காட்சிகளை தனது வரைதல் திறனால் ஒன்றுப்படுத்தி வசனங்களுக்கு ஏற்ற வகையில் ‘கார்ட்டூன்’களை உருவாக்குவதில், இயக்குனர்களுக்கு இணையாக செயல்படுபவர் ‘மோஷன் கார்ட்டூனிஸ்ட்’.

தேவைப்படும் திறன்கள்: நகைச்சுவை உணர்வு மற்றும் கலை ஆர்வமும் ஒரு சேர பெற்று, எதையும் மாற்றி சிந்திக்கும் கற்பனைத் திறன். அவற்றை ஓவியங்களில் தத்ரூபமாக பிரதிப்பலிக்கும் ஆற்றல். அவர்கள் உருவாக்கும் ‘கார்ட்டூன்’கள் மூலம் சமூக சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!

பணி வாய்ப்புகள்: நாளிதழ்கள், வார இதழ்கள் மட்டுமின்றி இன்றைய நவீன இணைய உலகில், வளர்ந்து வரும் வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களில் கார்ட்டூனிஸ்ட்களின் பங்கு அளப்பரியது. அச்சுப் பதிப்பகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், திரைப்பட நிறுவனங்கள், அனிமேஷன் ஸ்டுடியோஸ், கார்ட்டூன் நெட்வொர்க் போன்றவற்றிலும் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ‘கார்ட்டூனிஸ்ட்’களுக்கு பெரும் வரவேற்பு உண்டு.

எங்கு படிக்கலாம்?
தமிழகத்தில், விசுவல் கம்யூனிகேசன், பி.எப்.ஏ., எனும் இளம் கவின்கலை படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கார்ட்டூன், பெங்களூர் - http://cartoonistsindia.com/

சர் ஜெ.ஜெ. அப்ளைட் ஆர்ட், மும்பை -  www.jjiaa.org

நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன், அகமதாபாத் - www.nid.edu

பிலிம் அண்ட் டெலிவிசன் இன்ஸ்டிடியூட், மகாராஷ்டிரா - www.ftiindia.com

பரோடா பல்கலைக்கழகம், குஜராத் - www.msubaroda.ac.in






      Dinamalar
      Follow us