தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/’ஆர்கிடெட்’டால் மட்டுமே சாத்தியம்!

’ஆர்கிடெட்’டால் மட்டுமே சாத்தியம்!

’ஆர்கிடெட்’டால் மட்டுமே சாத்தியம்!


ஆக 23, 2016 12:00 AM

ஆக 23, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 23, 2016 12:00 AM ஆக 23, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் நாட்டில் முறையான நகரவடிவமைப்பு திட்டங்கள் இல்லாததால், குளங்கள், ஏரிகள் குடியிருப்புகளாக மாறிவருகின்றன. கட்டுமானத்தில் புதுமையான திட்டங்களின்றி, நமது தட்பவெப்ப நிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் சம்பந்தமே இல்லாத கட்டடங்கள் தான் பெரும்பாலும் கட்டப்படுகின்றன!

நகர வடிவமைப்பின் முக்கியத்துவம், நம்மால் இன்னும் முழுமையாக உணரப்படவில்லை என்பதற்கு உதாரணமாக, சென்னையில் புதியதாக உருவான, ஓ.எம்.ஆர்., எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலை  பகுதியை சொல்லலாம். கடும் போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு என  அங்கு நிலவும் பிரச்னைகள் ஏராளம்; முறையான திட்டம் இல்லாததால் சாதாரண மழைக்கே, வடிய வழியில்லாமல் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கின்றன. புதியதாக உருவான ஒரு பகுதிக்கே முறையான வடிவமைப்பு இல்லாமல், இவ்வளவு பிரச்னைகள் என்றால், எத்தகைய மோசமான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்!

பூங்கா, சுற்றுச்சூழல், திறந்த வெளிப்பகுதி, குடிநீர், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, நெரிசல் இல்லாத போக்குவரத்து என பல்வேறு விசயங்களில் கவனம் செலுத்தப்பட்டுதான், ஒரு நகரம் வடிவமைக்கப்பட வேண்டும். நமக்கு கிடைக்கும் வளங்களில், குறைந்த செலவில், நமது காலநிலைக்கு உகந்த கட்டுமானங்கள் கட்டப்பட வேண்டும். சுற்றுச்சூழக்கு தீங்கு விளைவிக்காத வகையிலான புத்தாக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டியதும் அவசியம். இவை அனைத்தும் சிறந்த ஆர்கிடெட்டால் மட்டுமே சாத்தியம்!

இன்னும் சொல்வதென்றால், நமது நகரங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான நிலையில் அமைக்கப்படவில்லை. நமது சாலைகள், பாதசாரிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் பகுதிகளாத்தான் உள்ளன. அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் தேவையற்ற பெரிய பெரிய கட்டடங்களை, மெட்ரோ ரயில் நிலையங்கள் கொண்டிருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட பகுதியில், எதிர்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளாகட்டும், மாசுபாடாகட்டும், அனைத்துவிதமான பிரச்னைகளையும் முன்பே ஆராய்ந்து உணர்ந்து, அதற்கேட்ப திட்டமிட்டு, நகரத்தை வடிவமைக்க ஆர்கிடெட்டால் மட்டுமே முடியும். இந்நிலையில், சமீபகாலமாக ஆர்கிடெட் மீதான கண்ணோட்டம் மாறிவருவது வரவேற்கத்தக்கது. ஆர்க்கிடெட்டின் பங்களிப்பு அனைத்து வகையான கட்டடங்களிலும், திட்டங்களிலும் இருக்க வேண்டும் என்பது உணரப்பட்டு வருகிறது!
 
எனினும், அரசு திட்டங்களில் ஆர்கிடெட்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. அரசின் அனைத்து திட்டங்களிலும், ஆர்கிடெட்கள் நியமிக்கப்பட வேண்டும்.  அப்போதுதான் இதுபோன்ற பிரச்னைகளையும், அதற்குரிய புதிய யோசனைகளையும், திட்டங்களையும் அரசிடம் எளிதில் கொண்டுசெல்ல முடியும். இயற்கைக்கு சாதகமான கட்டடங்களை ஏற்படுத்தி, மாசு குறைந்த நகரத்தை உருவாக்கவும், அழகு கொஞ்சும், இயற்கைக்கு உகந்த இந்தியாவை உருவாக்கவும் முடியும்!

ஆர்கிடெக்சர் பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளுடன் ஒப்பிடவே முடியாதபடியான நிலையில் தான் நாம் உள்ளோம். இந்தியாவில், குறிப்பாக புரொபஷனல் படிப்புகளில் பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு வெகு காலம் ஆகிறது. அவ்வாறில்லாமல், புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய பாடத்திட்டங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்!

-வி.பி.ரஜினிரெட்டி, இயக்குநர், சுவர்ணபூமி கல்வி நிறுவனங்கள், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us