தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மதிப்பெண்களா! திறன்களா! எது முக்கியம்?

மதிப்பெண்களா! திறன்களா! எது முக்கியம்?

மதிப்பெண்களா! திறன்களா! எது முக்கியம்?


ஆக 24, 2016 12:00 AM

ஆக 24, 2016 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 24, 2016 12:00 AM ஆக 24, 2016 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எந்த ஒரு தொழில் நிறுவனமும், மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களை பார்த்து வேலை வழங்குவதில்லை. வேலை வாய்ப்பிற்கான திறன்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கின்றன!

தொழில் நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக, வளாக நேர்காணல்கள் நடத்தினாலும், அதில் 10 மாணவர்களைக்கூட தேர்வு செய்வதில்லை. அதற்கு காரணம், மாணவர்களிடம் போதிய வேலைவாய்ப்பு திறன் இல்லாததே! வேலைவாய்ப்பில் மதிப்பெண்களை விட வேலைவாய்ப்பு திறன்களே முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது இதிலிருந்து புலனாகிறது!

பொறியியல் கல்லூரிகளில் சேர இன்று, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அச்சம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததே இந்த அச்சத்திற்கு பிரதான காரணம். கல்லூரியை விட்டு செல்லும்போதே வேலையுடன் செல்ல வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாணவர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது கல்லூரிகளின் கடமை!

சிறந்த மாணவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண மாணவர்களாக இருந்தாலும் சரி, அனைவரது வேலைவாய்ப்பு திறன்களையும் மேம்படுத்தி, வேலைவாய்ப்பை பெற்றுத்தரும்போது தான், பெற்றோர் மற்றும் மாணவர்களின் அச்சம் நீங்கும்! பாடத்திட்டம், தேர்வு, மதிப்பெண் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினால், வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர இயலாது!

கல்லூரிப் படிப்பின் போதே திறன்களை வளர்த்துக்கொண்டால்தான், சாதாரண மாணவர்களும், சாதனை மாணவர்களாக உருவாக முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். படிக்கும் போதே ஆங்கிலத்திறன், ஆளுமைப் பண்பு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், குழு கலந்துரையாடல் போன்ற திறன்களை, மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சுயமாக ‘புராஜெக்ட்’ செய்யும் மாணவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைத்துவிடும். ‘இன்டஸ்டிரியல் விசிட்’ மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும். தமிழ்வழியில் பயின்ற கிராமப்புற மாணவர்கள், பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், பட்டப்படிப்பில் ஆங்கில வழிக் கல்வி அவர்களுக்கு புதிதாய் தெரிகிறது. அத்தகைய மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு, முதல் ஒரு மாதம் மனோதத்துவ ரீதியான பயிற்சி அளிப்பது நல்லது. சிவில் சர்வீசஸ் மற்றும் வங்கி பணி உட்பட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவப் பருவத்தில் இருந்தே தயாராவதும், தயார்படுத்துவதும் வாழ்த்துகளுக்குரியது!

-ஏ.முகமது அப்துல் காதர், முதல்வர், செண்டு பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us